ஆன்ட்ராய்டு டேப்லட்டினை அறிமுகம் செய்யும் சிங்க் நிறுவனம்!

ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு புதிய டேப்லட்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரை விட டேப்லட்களை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
ஏனெனில் இதை எளிதாக எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியும் என்பதால் டேப்லட் அதிகமான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது.
7 இஞ்ச் திரை கொண்ட இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்டது. லெட் தொடுதிரை வசதி கொண்ட இந்த டேப்லட் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை இந்த டேப்லட் வழங்கும்.
இதில் உள்ள 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் ஏஆர்எம் கார்டக்ஸ் ஏ-8 பிராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. சிங்க் இசட்-999 ப்ளஸ் டேப்லட் மூலம் 512 எம்பி ரேம் வசதியையும் பெறலாம்.
இரண்டு கேமராக்களை இந்த டேப்லட்டில் பயன்படுத்தலாம். 2 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் இந்த டேப்லட் வழங்கும்.
இதில் உள்ள 8 ஜிபி இன்டர்னல் மெமரியின் மூலம் நிறைய தகவல்கள் ஸ்டோர் செய்து கொள்ள முடியும். இதன் மைக்ரோஎஸ்டி கார்டு 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடு்த்தி கொள்ள உதவும்.
ஹோம்ஷாப்-18, ஃபிலிப்கார்ட், இன்ஃபோபீம் போன்ற வலைத்தளங்களில் ஆன்லைனில் இந்த டேப்லட்டினை பெறலாம். 3ஜி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட்டின் விலையை பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. இந்த டேப்லட் ரூ. 11,990 விலை கொண்டது.


Click it and Unblock the Notifications