Home
Computer

டெப்லெட் துறையில் கால் பதிக்கும் இசட்டிஇ!

By Karthikeyan
டெப்லெட் துறையில் கால் பதிக்கும் இசட்டிஇ!

சாதாரண மின்னணு டிவைஸ்களை வழங்கி வந்த சீனாவைச் சேர்ந்த இசட்டிஇ நிறுவனம் இப்போது உயர்தர மின்னனு டிவைஸ்களை தயாரிக்கும் துறையில் தடம் பதிக்க இருக்கிறது. அதாவது தனது திட்டத்தை லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் கண்காட்சியில் தொடங்க இருக்கிறது. இந்த சிடிஇ ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு டிவைஸ்களைத் தயாரிக்காத ஒரு நிறுவனமாக இருந்தாலும் இப்போது தைரியாமாக டேப்லெட் வர்த்தகத்தில் குதிக்கிறது.

இசட்டிஇயின் கீழ் வரும் டேப்லெட் என்விடியா பூத்தில் டெமோ செய்து காட்டப்பட்டது. அதனால் பிரபலமான என்விடியா சிடிஇன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. அதன் பயனாக இசட்டிஇ இந்த டேப்லெட் வர்த்தகத்தில் முழுமையாக இறங்குகிறது.

இந்த இசட்டிஇ புதிய டேப்லெட்டுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனால் இந்த டேப்லட் 7 இன்ச் அளவில் வருகிறது. மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் மற்றும் டேக்ரா 3 ப்ராசஸருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிடிஇ டேப்லெட் நவீன ஆன்ட்ராய்டு இயங்கு தளம் கொண்டிருப்பதால் இதன் செயல்திறன் அற்புதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லட் புதிய சாப்ட்வேர் அப்ளிகசன்களையும் கொண்டிருக்கும் என நம்பலாம். ஆனால் இதன் ஹார்ட்வேர் அந்த அளவிற்கு மிக உறுதியாக இருக்குமா என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது.

ஆனால் டேக்ரா 3 ப்ராசஸர் அந்த கேள்விக்கு முடியும் என்ற பதிலை சொல்லும். ஏனெனில் டேக்ரா ப்ராசஸர் இந்த டேப்லெட்டுக்கு அபாரமான வேகத்தைக் கொடுக்கும். இதன் டிஸ்ப்ளே ரிசலூசன் 1280 X 800 ஆக இருக்கும். அதுபோல் இதன் டிஸ்ப்ளேயில் இருக்கும் குறிகளும் மிகச் சிறியதாக இருக்கும்.

இந்த போட்டி நிறைந்த சந்தையில் வெற்றி பெற வேண்டும் என்றால் இசட்டிஇ இன்னும் நிறைய புதிய சிந்தைனைகள் மற்றும் புதுமைகளை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த இசட்டிஇ டேப்லெட்டின் விலை மற்றும் அதன் அறிமுகம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X