Home
Computer

கட்டுறுதியான புதிய இசட்டிஇ டேப்லெட்!

By Karthikeyan
கட்டுறுதியான புதிய இசட்டிஇ டேப்லெட்!

சிடிஇ நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை சந்தையில் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு சிடிஇ வி96 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிடிஐஎ 2012 என்ற நிகழ்வில் இந்த டேப்லெட் அறிமும் செய்யப்பட்டது. இந்த புதிய டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வர இருக்கிறது.

இந்த சிடிஇ டேப்லெட்டில் உள்ள க்வல்காம் 1.7 ஜிஹெர்ட் டூவலக் கோர் ப்ராசஸர் இந்த டேப்லெட்டிற்கு மகா உறுதியையும் மற்றும் தாறுமாறான வேகத்தையும் வழங்கும். இதன் 1ஜிபி ரேமில் ஏராளமான தகவல்களை சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த டேப்லெட் 4 எல்டிஇ பேண்டுகள், 3 42எம்பிபிஎஸ் எச்எஸ்பிஎ+ மற்றும் க்வாட் பேன்ட் எல்டிஇ போன்ற தொழில் நுட்பங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10.1 இன்ச் அளவுள்ள திரையுடன் வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு இது 5 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 2 எம்பி முகப்பு கேமரா கொண்டுள்ளதால் இந்த டேப்லெட்டில் சூப்பராக போட்டோ எடுக்க முடியும். அம்சமாக வீடியோ உரையாடலையும் நடத்த முடியும். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு துளை இந்த டெப்லெட்டில் உள்ளதால் இதன் மெமரியை விரிவு செய்யவும் முடியும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் ப்ளூடூத், யுஎஸ்பி மற்றும் வைபை போன்ற அம்சங்களையும் கொண்டு வருகிறது. அதனால் இந்த டேப்லெட்டில் தகவல் பரிமாற்றம் மிக எளிதாக நடைபெறும்.

இந்த சிடிஇ டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X