புத்தாண்டில் புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் இசட்டிஇ!

இந்த டேப்லெட் இசட்டிஇ வி55 என்ற பெயரில் மார்க்கெட்டிற்கு வர உள்ளது. இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்குதளத்துடன் வரும் என்று தெரிகிறது. ஆனால் இவற்றின் சிறப்பு அம்சங்கள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும், ஆன்லைன் ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, புதிய இசட்டிஇ வி55 டேப்லெட் அகன்ற டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 1 ஜிகா ஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்நாப்டிராகன் எஸ்ஓசி பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
எனவே, இதன் செயல் திறனும் அதிரடியாக இருக்கும். இதில் 512எம்பி ரேம் பொருத்த்ப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதில் இன்டர்னல் சேமிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் எக்ஸ்டர்னல் மெமரி கார்டுகள் இதற்கு தேவைப்படாது. இதன் கேமரா பற்றியத் தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
அதே நேரத்தில் இசட்டிஇ நிறுவனம் 10 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்னொரு சாதனத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. குறிப்பாக இசட்டிஇ வழங்கும் சாதனங்களின் பேட்டரிகள் எப்போதுமே அதிக மின் திறனுடன் இருக்கும்.
எனவே,இந்த புதிய இசட்டிஇ டேப்லெட் வி55ன் பேட்டரியும் மிக அபாரமான மின் திறனைக் கொண்டிருக்கும் என நம்பலாம். இந்த டிவைசின் விலை பற்றி தெரியவில்லை என்றாலும், மலிவு விலையில் வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications