டேப்லட் மார்கெட்டிற்கு ஹிட் கொடுக்க வரும் இசட்டிஇ டேப்லட்!

By Super
|

டேப்லட் மார்கெட்டிற்கு ஹிட் கொடுக்க வரும் இசட்டிஇ டேப்லட்!
புதிய தொழில் நுட்பங்களை அதிகம் நேசிப்பவர்களுக்கு தகுந்த வகையில் நிறைய மின்னணு சாதனங்களை

வெளியிட்டு இருக்கிறது இசட்டிஇ நிறுவனம். புதிய லைட் டேப்-300 என்ற டேப்லட்டை சர்வதேச மொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்து இருக்கிறது இசட்டிஇ நிறுவனம். சர்வதேச மொபைல் வேர்ல்டு கண்காட்சியில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மட்டும் அறிமுகமாகி கொண்டு இருந்தது. ஆனால் இப்பொழுது சில டேப்லட்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இந்த டேப்லட் 7 இஞ்ச் தொடுதிரையின் மூலம் 1200 X 800 பிக்ஸல் துல்லியத்தினையும் கொடுக்கும்.

தகவல்களை அதி வேகத்தில் பெற இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு வி4.0 இயங்குதளம் கொண்டது.

5 மெகா பிக்ஸல் கேமராவும், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். லைட் டேப்-300 டேப்லட்டின் மூலம் நவீன வசதிகளையும் பெற்று பயனடையலாம். இந்த டேப்லட் நீடித்து உழைக்கும் 3,400 எம்ஏஎச் பேட்டரி

பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து 5 மணி நேரம் 5 நிமிடம் பயன்படுத்த முடியும். இதில் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறலாம். இசட்டிஇ லைட் டேப்-300 டேப்லடின் விலை கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X