டிவி செட்டாப் பாக்ஸ் அளவில் புதிய குட்டி கணினிகள்!

By Super
|
டிவி செட்டாப் பாக்ஸ் அளவில் புதிய குட்டி கணினிகள்!

சோடாக் நிறுவனம் க்ராபிக்ஸ் துறையில் மிகவும் பிரபலமான நிறுவனம் ஆகும். அந்நிறுவனம் லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் தனது புதிய தீப்பெட்டி அளவு கணினிகளை அறிமுகப்படுத்தியது. அந்த சிறிய கணினிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இந்த கணினிகள் 2ஜியைச் சேர்ந்த சிபாக்ஸ் மினி கணினிகளாகும். இந்த கணினிகளின் பெயர்கள் முறையயே சிபாக்ஸ் ஐடி 81, சிபாக்ஸ் ஐடி 80 மற்றும் சிபாக்ஸ் எடி04 ஆகும்.

மேற்சொன்ன இந்த கணினிகள் மிகவும் அடக்கமாக சிறிய அளவில் இருக்கின்றன. அதாவது பார்ப்பதற்கு டிவிக்குரிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் போல இருக்கிறது. ஆனால் இந்த கணினிகள் சிறியதாக இருந்தாலும் இதன் ப்ராசஸிங் சக்தி மிக அதிகமாக இருக்கும்.

இந்த 3 கணினிகளுமே ஒரே மாதிரியான டிசைனைக் கொண்டிருக்கிறன. இதன் வெளிப்புறம் கருப்பு நிறத்தில் வருகிறது. அதன் நடுவில் ஊதா நிறத்தில் ஒரு வட்டம் இருக்கிறது. இந்த கனிணியின் முன்புறம் எல்லாவகையான போட்டுகளும் உள்ளன. அதாவது யுஎஸ்பி போர்ட், மெமரி கார்டு ஸ்லாட்டுகள் மற்றும் ஆடியோ மற்றும் மைக்ரோபோன் ஜாக்குகள் ஆகியவை பவர் ஆன் பட்டன்களுக்குக் கீழே உள்ளன.

கான்பிகரேசனைப் பொருத்தவரை சிபாக்ஸ் ஐடி 81 இன்டல் செலரன் ப்ராசஸர் மற்றும் இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த ப்ராசஸரின் கடிகார வேகம் 1.2 ஜிஹெர்ட்ஸ் ஆகும்.

பாகஸ் ஐடி 80 இன்டல் ஆட்டம் ப்ராசஸரைத் தாங்கி வருகிறது. இந்த டூவல் கோர் ப்ராசஸர் 2.13 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்டுள்ளது. அதுபோல் இந்த ப்ராசஸர் டிஸ்க்ரீட் க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கணினியின் க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட் என்விடியா ஜிஇபோர்ஸ் ஆகும். இந்த யூனிட் 512 எம்பி அளவிலான டிடிஆர்3 வீடியோ மெமரியைக் கொண்டுள்ளது.

இறுதியாக எடி04 கணினி 1.65 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட எஎம்டி டூவல் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் கார்டும் உண்டு.

இதர அம்சங்கள் அனைத்தும் இந்த கணினிகளுக்கு பொதுவாகவே உள்ளன. அதாவது இந்த கணினிகள் எச்டிஎம்ஐ மற்றும் டிவிஐ போர்ட்டுகள் கொண்டுள்ளன. அடுத்ததாக வைபை மற்றும் ப்ளூடூத் 3.0 மற்றும் ஐஆர் ரிமோட்டும் கொண்டு வருகின்றன. கன்பிகரேசனைப் பொருத்தவரை இவை இரண்டு மாடல்களில் வருகின்றன. இதன் சாதாரண மாடல்களில் வாடிக்கையாளர் தமக்குத் தேவையானவற்றை சேர்க்கும் அளவில் மெமரி அல்லது ஹார்ட் டிஸ்க் போன்றவை இல்லை. ஆனால் இதன் ப்ளஸ் மாடல்களில் 2ஜிபி ரேமும் 320ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் உள்ளன.

விலையைப் பொருத்தமட்டில் சோடாக் சிபாக்ஸ் ஐடி 81, ஐடி 80 மற்றும் எடி04 ஆகியவை முறையே ரூ.13,333, ரூ.14,555 மற்றும் ரூ.1,6999 ஆகிய விலைகளில் வருகின்றன. இவற்றின் ப்ளஸ் மாடல்கள் ரூ.19,999 மற்றும் ரூ. 24,555 விலைகளில் வருகின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X