Home
Computer

மலிவு விலையில் வரும் ஸிங்லைப் இபேட் டேப்லெட்

By Shajahan
மலிவு விலையில் வரும் ஸிங்லைப்  இபேட் டேப்லெட்

தற்போது கனிணி சந்தையில் ஏராளமான டேப்லட்டுகளைப் பார்க்க முடிகிறது. அதுவும் வருகின்ற எல்லா டேப்லட்டுகளுமே விதவிதமான அளவுகளில் டிசைன்களில் மற்றும் விலைகளில் வருகின்றன.

குறிப்பாக எச்பி மற்றும் ஏசர் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில் புதிதாக வருகின்ற நிறவனங்கள் டேப்லெட் சந்தையைப் பிடிப்பதற்காக மிகவும் தரமான டேப்லட்டுகளை மிகக் குறைந்த விலையில் வழங்குகின்றன.

அந்த வரிசையில் இப்போது ஸ்ப்ளாஷ் டெலிகாம் இணைந்திருக்கிறது. அந்நிறுவனம் தமது ஸிங்லைப் இ-பேட் ஸட்எல்-101 என்ற டேப்லெட் மூலம் சந்தையில் களம் காண உள்ளது. இந்த டேப்லெட்டின் பரப்பு 270மிமீ X 180மிமீ X 15மிமீ ஆகும். அதனால் இதை ஒரு காம்பேக்ட் டேப் எனலாம். இதன் எடை 500 கிராம் மட்டுமே.

ஸிங்லைப் இ-பேட் ஸட்எல்-101ஐ பார்த்தால் அது ஐபேடைப் போலவைத் தோன்றும். ஆனால் இது ஐபேடை விட சற்று தடிமனாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மைக்ரோ எஸ்டி கார்டுக்கான கார்டு ஸ்லாட், பவர் பட்டன் மற்றும் ஒலி அளவு பட்டன் போன்றவை இருக்கும். மேலும் இதை பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும். அதே நேரத்தில் இது சற்று தடிமனாக இருக்கும்.

ஸிங்லைப் இ-பேட் ஸட்எல்-101 டேப்லட் 10.1 இன்ச் கொண்ட டிஎப்டி திரையைக் கொண்டுள்ளது. இந்த திரையின் ரிசலூசன் 1024 x 600 ஆகும். ஆனால் இதில் மல்டி டச் வசதி கிடையாது. ஆனால் இது ஒரு பெரிய குறை கிடையாது. ஏனெனில் இதனுடைய குறந்த விலை இந்த சிறிய குறையை சரி செய்துவிடும்.

இதன் முகப்பு கேமரா மூலம் மிக எளிதாக வீடியோ காலிங் செய்யலாம். அதுபோல் இதில் ரியர் கேமரா கிடையாது.

ஸிங்லைப் இ-பேட் ஸட்எல்-101 4ஜிபி இன்டர்னல் சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் எக்ஸ்டர்னல் மெமரிகார்டுக்கான வசதி இதில் உள்ளதால் அதன் மூலம் இதன் சேமிப்பை விரிவுபடுத்த முடியும். அதுபோல் இது எக்ஸ்டர்னல் மைக்ரோ எஸ்டி கார்டையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் இதன் எக்ஸ்டர்னல் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். மேலும் இதில் இன்டக்ரேட்டட் ஸ்பீக்கர்களும் மற்றும் ஹெட்போன் இணைப்பும் உள்ளன.

ஸிங்லைப் இ-பேட் ஸட்எல்-101ன் முக்கிய அம்சம் அதன் எஆர்எம்11 ப்ராசஸர் ஆகும். இந்த ப்ராசஸர் 1ஜிஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளது. இதன் மொத்த மெமரி 512 எம்பி ஆகும்.

ஸிங்லைப் இ-பேட் ஸட்எல்-101 ஆன்ட்ராய்டு 2.2 இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. அதுபோல் இதில் 3ஜி மற்றும் வைபை இணைப்பும் உள்ளன. யுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. ஆனால் இதில் ப்ளூடூத் வசதி இல்லை. அதுபோல் இந்த டிவைஸ் 2400எம் எஹெர்ட்ஸ் மின்திறன் கொண்ட லித்தியம்-ஐயன் பேட்டரியைக் கொண்டுள்ளது.

விலையைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் ஸிங்லைப் இ-பேட் ஸட்எல்-101ன் விலை ரூ.15,000 மட்டுமே. அதனால் இது கண்டிப்பாக இந்திய வாடிக்கையாளர்களைச் சுண்டி இழுக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X