Home
Computer

கச்சிதமான வடிவமைப்புடன் வரும் சென்ஃபோக்கஸ் டேப்லட்!

By Super

கச்சிதமான வடிவமைப்புடன் வரும் சென்ஃபோக்கஸ் டேப்லட்!
மைசென்டேப் 3ஜி என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது சென்ஃபோக்கஸ் இன்ட்ரோஸ் நிறுவனம். அடிப்படையில் இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டு இயங்குவதாக இருக்கும். இதில் சிறப்பான 3ஜி நெட்வொர்க் வசிதயினையும் பெறலாம்.

ஆன்ட்ராய்டின் லேட்டஸ்ட் ஜெல்லி பீன் வெர்ஷன் அறிமுகமானாலும், ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதன் 7 இஞ்ச் திரையில் 800 X 400 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பயன்படுத்தலாம்.

இதனால் இந்த மைசென்டேப் டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை வழங்குவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை தான். பிரத்தியேகமாக இதில் பாக்ஸ்சிப் ஏ-10 சிப்செட், மெயில் 400 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் இதில் பெறலாம்.

0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை வழங்கும் இந்த டேப்லட், 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை வழங்கும். இதில் கூடுதல் வததியாக, 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள முடியும். 3ஜி நெட்வொர்க் வசதியினை ழவங்கும் இந்த டேப்லட் சிறப்பாக வைபை வசதியினையும் கொடுக்கும்.

இதன் 3,200 எம்ஏஎச் பேட்டரி, இந்த டேப்லட்டில் இருக்கும் வசதியினை பயன்படுத்தும் வகையில் நீடித்து உழைக்கும் ஆற்றலையும் வழங்கும். சென்ஃபோக்கஸ் நிறுவனத்தின் இந்த புதிய மைசென்டேப் 773பி மாடல் டேப்லட் ரூ.9,930 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X