மலிவு விலையில் பொழுதுபோக்கு வசதிகளுடன் புதிய டேப்லெட்!

Posted By: Karthikeyan
மலிவு விலையில் பொழுதுபோக்கு வசதிகளுடன் புதிய டேப்லெட்!

சென் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு சென் மொபைல் அல்ட்ராபுக் எ100 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

குறிப்பாக இந்த சென் டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் மாலி 400 ஜிபியுவைக் கொண்டிருக்கிறது. அதுபோல் உயர்ந்த ரிசலூசனுடன் கூடிய 7 இன்ச் திரையை இந்த டேப்லெட் வழங்குகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மிக அதிகமான பொழுதுபோக்கு அம்சங்களைத் தாங்கி வருகிறது.

மேலும் தரமான ரேம் மற்றும் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்கும் வசதி ஆகியவற்றுடன் இந்த டேப்லெட் களமிறங்குகிறது. இந்த சென் டேப்லெட் லைவ் பேனல் மெனு என்ற தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் படங்களுக்கு ஏற்றவாறு இதன் டிஸ்ப்ளேயை மாற்றிக் கொள்ளலாம். அதோடு மேலும் பல புதிய அப்ளிகேசன்களையும் இந்த டேப்லெட் தாங்கி வருகிறது.

பொழுதுபோக்கிற்காக இந்த டேப்லெட் ரீடரஸ் ஹப் மற்றும் மியூசிக் ஹப் போன்ற பல அப்ளிகேசன்களைக் கொண்டு வருகிறது. அதன் மூலம் பல மொழிகளில் உள்ள இ-நியூஸ் பேப்பர்ஸ், இ-புக்ஸ், இ-மேக்கசின்ஸ் மற்றும் லட்சக்கணக்கான பாடல்கள் போன்றவைற்றை இந்த டேப்லெட்டில் அனுபவிக்கலாம்.

மேலும் இந்த சென் கேமராவில் 1.3எம்பி முகப்புக் கேமரா உள்ளதால் வீடியோ உரையாடலைத் தடங்கலின்றி நடத்தலாம். அதோடு இதன் பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு 14 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

மேற்சொன்ன எல்லா அம்சங்களையும் இந்த சென் டேப்லெட் வழங்கினாலும் இது மிகவும் குறைவான விலைக்கே விற்கப்படுகிறது. அதாவது இந்த டேப்லெட்டை ரூ.6,000க்கு வாங்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்