ஆன்ட்ராய்டில் அசத்தும் அல்ட்ராடேப் ஏ-900 டேப்லட்!

By Super
|

ஆன்ட்ராய்டில் அசத்தும் அல்ட்ராடேப் ஏ-900 டேப்லட்!
எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது சென் மொபைல் நிறுவனம்.

கூடிய விரைவில் விற்பனை சந்தையை வந்தடைய இருக்கிறது சென் மொபைல் நிறுவனத்தின் புதிய அல்ட்ராடேப் ஏ-900 டேப்லட். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் மூலம் சிறப்பாக இயங்கும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பெற முடியும்.

1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை வழங்கும் இந்த டேப்லட் 9 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதில் நிறைய ப்ரீலோடடு அப்ளிக்கேஷன்களையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். நிம்பூஸ், மிக்-33, பேடிஎம், இபிபோ- டீனாப்டி, ரம்மி, பாலிவுட்ஜி, நெக்ஸ்ஜிடிவி, மேப்மைஇன்டியா, ரீடர்ஸ் ஹப், மியூசிக் ஹப் போன்ற பல ப்ரீலோடடு அப்ளிக்கேஷன்களையும் பயன்படுத்தலாம்.

இது போன்ற ப்ரீலோடடு செய்யப்பட்ட அப்ளிக்கேஷன்களை பயன்படுத்த இதில் சிறந்த பேட்டரி ஆற்றலையும் பெறலாம். 512.9 கிராம் எடை கொண்ட இந்த அல்ட்ராடேப் ஏ-100 டேப்லட் மூலம் 4,000 எம்ஏஎச் பேட்டரியினையும் எளிதாக பயன்படுத்த முடியும். சென் மொபைல் நிறுவனத்தின் இந்த அல்ட்ரா டேப் ஏ-900 டேப்லட்டை ஹோம்ஷாப்18 வலைத்தளத்தில் ரூ. 7,999 விலை பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X