ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ: ஒரு சிறந்த மெக்கானிக்கல் கீபோர்டு.!

ஒவ்வொரு கீ மீதும் 55 கிராம் எடை அழுத்தம் தேவைப்படுவதோடு, 4 மிமீ உள்ளே செல்லும் தன்மையைப் பெற்றுள்ளது.

|

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய மெக்கானிக்கல் கீப்போர்ட்டான ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ-வை குறித்த விரிவான மதிப்புரையை, இந்தக் கட்டுரையில் காண்போம்.

ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ: ஒரு சிறந்த மெக்கானிக்கல் கீபோர்டு.!

நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் கேம்மர் அல்லது ஒரு உள்ளடக்க எழுத்தாளராக இருந்து, சிறப்பான செயல்பாட்டை அளிக்கக் கூடிய ஒரு கீபோர்டை பயன்படுத்த விரும்பினால், உங்கள் தேவையை ஸீப்ரோனிக்ஸ் மேக்ஸ் ப்ரோ கீபோர்டு பூர்த்தி செய்யும். மேலும் இது ரூ.3,999 என்ற விலை நிர்ணயத்துடன், போட்டியில் முன்னணி வகிக்கிறது.

வடிவமைப்பு
முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய தன்மையை இது பெற்றுள்ளது. இந்த முழு அளவு கீப்போர்டில், எண்களுக்காக விடப்பட்ட கீபேடையும் சேர்த்து மொத்தம் 104 நீலநிற கீ-கள் காணப்படுகின்றன.

ஒவ்வொரு கீ மீதும் 55 கிராம் எடை அழுத்தம் தேவைப்படுவதோடு, 4 மிமீ உள்ளே செல்லும் தன்மையைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக நாம் பார்க்கும் போது, ஒரு மெக்கானிக்கல் கீபோர்டில் நாம் எதிர்பார்க்கும் ஒரு வலிமையை, இதில் காண முடிகிறது. இதில் உள்ள 1.8 மீட்டர் நீளம் கொண்ட கேபிள், தங்க மூலாம் பூசிய யூஎஸ்பி ஏ போர்ட் ஆகியவை உள்ளது. இது பின்னிக் கொள்ளாத வகையில் இருப்பதால், வளைந்து கொள்வது, அறுந்து விடுவது அல்லது சிக்கி கொள்வது போன்றவை தவிர்க்கப்பட்டு, நீண்டகால பயன்பாட்டிற்கு ஏதுவாக உள்ளது.

ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ: ஒரு சிறந்த மெக்கானிக்கல் கீபோர்டு.!

ஆர்ஜிபி லைட்டிங்
ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோவில் அளிக்கப்பட்டுள்ள ஆர்ஜிபி லைட்டிங், நல்ல வெளிச்சமான சூழ்நிலையிலும் வேலை செய்கிறது. இந்த கீபோர்டில் முன் வரையறுக்கப்பட்ட 18 லைட்டிங் அமைப்பு உடன் 5-ஸ்பீடு முறைகளுடன் கூடிய 6 ஒளிர்வு நிலைகள் காணப்படுகிறது. எனவே பயனரின் விருப்பத்திற்கேற்ப, கீபோர்டின் அமைப்பை மாற்றியமைத்து கொள்ளலாம். ஆனால் மற்ற பிரிமியம் கீபோர்டுகளைப் போல, ஒவ்வொரு கீ-களின் நிறத்தையும் மாற்றம் செய்ய முடியாது. ஏனெனில் அது குறிப்பு உணர்த்து வகையில் நிலையானது. ஏஎஸ்டிடபிள்யூ மற்றும் 1234 ஆகிய கீ-களில் வரும் ஒளியை மட்டுமே பெரும்பானோர் விரும்புகிறார்கள். மேலும் பாம்பு போன்ற வடிவிலான ஆர்ஜிபி ஒளி அசைவு , மயக்குவது போல உள்ளது. இதன் ஒளி நிறத்தை மாற்ற முடியும். இது தவிர, பல்வேறு நிறத்திலான அமைப்பு மூலம் அதிக கவர்ச்சியைப் பெறுகிறது.

அனுபவம்
ஒரு சிறந்த மெக்கானிக்கல் கீபோர்டு என்பது தட்டச்சு செய்யும் போது பயனருக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை அளிக்கிறது. மேலும் ஒரு சிறந்த கீபோர்டு மூலம் உடன் இருப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படும். ஸீப்ரோனிக்ஸ் மேக்ஸ் ப்ரோவிலும், அதே நிலை தான் ஏற்படுகிறது.

நீங்கள் செய்ய வேண்டிய தட்டச்சு பணிகளை விரைவாக முடிக்க ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ நிச்சயம் உதவும். ஆனால் உங்களைச் சுற்றிலும் உள்ள அனைவரின் கவனத்தையும் கவர நேரிடும். மேலும் இதில் உள்ள கீ-களை மிக விரைவாக பயன்படுத்த முடிகிறது என்பதோடு, தேவைக்கு ஏற்ப கீபோர்டின் தோற்றத்தையும் அழகியல் தன்மைகளையும் மாற்றி அமைக்கவோ அல்லது திருத்தவோ முடியும். இதற்கு முழு கீபோர்டையும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், இந்திய மெக்கானிக்கல் கீபோர்டு சந்தையைப் பொறுத்த வரை, ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ-க்கு பெரிய அளவிலான போட்டி எதுவும் இல்லை.

ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ: ஒரு சிறந்த மெக்கானிக்கல் கீபோர்டு.!

முடிவு
ரூ.5 ஆயிரத்திற்கு குறைவாக விலையில் கிடைக்கக் கூடிய சிறந்த கீபோர்டுகளில், ஜீப்ரானிக்ஸ் மேக்ஸ் ப்ரோ-வும் ஒன்றாகும். இதில் பல்வேறு அம்சங்கள் இருப்பது தவிர, ஆர்ஜிபி லைட்டிங் மற்றும் சிறந்த கேபிள் போன்ற ஒரு உயர் தர கீபோர்டில் காணப்படும் அம்சங்களும் காணப்படுகின்றன. ஆயினும், தனிப்பட்ட கீ-களை விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து கொள்ள முடியாது. மேலும் கீபோர்டின் கீழ் பகுதி பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதால், தவறுதலாக கீழே விழுந்தால் எளிதில் உடையும் வாய்ப்புள்ளது. மற்றப்படி, திரவங்களில் இருந்து எந்தவிதமான பாதுகாப்பும் இதற்கு அளிக்கப்படவில்லை. எனவே சற்று நீர் விழுந்தாலும், உள்ளே உள்ள சாதனங்கள் எளிதில் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இது ஒரு சிறந்த கீபோர்டு என்று கூறுவதில் தவறவில்லை.
Best Mobiles in India

English summary
Zebronics Max Pro Review: The Mechanical keyboard that clicks ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X