ரெட்மி நோட் 4ஜி டேப்ளெட் ரூ. 9,999 விலைக்கு நாளை முதல் விற்பனைக்கு வருகின்றது...

By Meganathan
|

ரெட்மி 1எஸ் வெற்றிக்கு பின் சியோமி தனது முதல் பேப்ளெட்டை வெளியிட்டுள்ளது, புதிய ரெட்மி நோட் டிசெம்பர் 2 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரெட்மி நோட் 4ஜி ரூ. 9,999 விலைக்கு நாளை விற்பனைக்கு வருகின்றது

5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே, காரினிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்ட ரெட்மி நோட் 3ஜி ரூ.8,999 க்கும், 4ஜி ரூ.9,999க்கும் விற்பனையாகவுள்ளது. ப்ளாஸ்டிக் கவர் மூலம் செய்யப்பட்டுள்ள பின்புறம் பார்க்க காந்தம் போல் இருப்பது அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

ரெட்மி நோட் 4ஜி ரூ. 9,999 விலைக்கு நாளை விற்பனைக்கு வருகின்றது

இந்த விலையில் 3ஜி வகையை சார்ந்தது 1.7 ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர் மலி-450எம்பி4 கிராபிக்ஸ் மற்றும் 2ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 4ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 400 சீரிஸ் குவாட்கோர் சிபியு மற்றும் 2 ஜிபி ராம் கொண்டு ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன் மூலம் இயங்குகின்றது.

ரெட்மி நோட் 4ஜி ரூ. 9,999 விலைக்கு நாளை விற்பனைக்கு வருகின்றது

கேமரா அம்சங்களை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. மெமரியை பொருத்தவரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

ரெட்மி நோட் 4ஜி ரூ. 9,999 விலைக்கு நாளை விற்பனைக்கு வருகின்றது

மேலும் 2ஜி, 3ஜி, 4ஜி, டூயல் சிம், ப்ளூடூத், வைபை, ஜிபிஆர்எஸ், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் என பட்டியல் நீண்டாலும் இத்தனை அம்சங்களுக்கும் சிறப்பாக சக்தியூட்ட 3100 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note to be launched tomorrow for Rs 8,999. After the success of the Redmi 1S, Xiaomi is out with its first phablet - the Redmi Note which will start selling from December 2nd at Rs 8,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X