Home
Computer

அதிரவிடும் பட்ஜெட்.. 1டிபி ஸ்டோரேஜ்.. 16GB மெமரி.. 16-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது Redmi லேப்டாப்..

சியோமி நிறுவனம் இரண்டு புதிய ரெட்மி லேப்டாப் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது சியோமி ரெட்மி புக் 14 2024 மற்றும் சியோமி ரெட்மி புக் 16 2024 எனும் லேப்டாப் மாடல்கள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல்களும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

அதேபோல் தற்போது சியோமி ரெட்மி புக் 14 2024 மற்றும் சியோமி ரெட்மி புக் 16 2024 ஆகிய லேப்டாப் மாடல்கள் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய லேப்டாப் மாடல்கள் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு லேப்டாப் மாடல்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

16GB மெமரி.. 16-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது Redmi லேப்டாப்..

சியோமி ரெட்மி புக் 14 2024 அம்சங்கள் (Xiaomi Redmi Book 14 2024 Specifications): 14-இன்ச் 2.8கே டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி ரெட்மி புக் 14 2024 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 2880×1800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல் எஸ்ஆர்ஜிபி கலர் காமட், 242 பிபிஐ பிக்சல் டென்சிட்டிஉள்ளிட்டபல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி லேப்டாப்.

குறிப்பாக சியோமி ரெட்மி புக் 14 2024 மாடலில் இன்டெல் ஐ5-13500எச் பிராசஸர் (Intel i5-13500H processor) வசதி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு டூயல் ஃபேன் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த லேப்டாப். மேலும் இதில் கேம் விளையாடும் போது லேப்டாப் சூடாவதைத் தடுக்க அனைத்து தொழில்நுட்ப வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 16ஜிபி LPDDR5-6400 ரேம் மற்றும் 1டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த சியோமி ரெட்மி புக் 14 2024 மாடல். குறிப்பாக 1.37 கிலோ எடை மற்றும் 15.9 மிமீ தடிமன் கொண்டது இந்த அசத்தலான லேப்டாப். மேலும் 56W பேட்டரி, தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி ஏ போர்ட்கள், எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த சியோமி ரெட்மி புக் 14 2024 மாடலில் உள்ளன.

சியோமி ரெட்மி புக் 16 2024 அம்சங்கள் (Xiaomi Redmi Book 16 2024 Specifications): 16-இன்ச் 2.5கே டிஸ்பிளே உடன் இந்த சியோமி ரெட்மி புக் 16 2024 மாடல் வெளிவந்துள்ள. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ். 100 சதவீதம் எஸ்ஆர்ஜிபி கலர் காமட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த சியோமி ரெட்மி புக் 16 2024 மாடலில் உள்ளது.

இன்டெல் ஐ5-13500எச் பிராசஸர் (i5-13500H processor) வசதியுடன் சியோமி ரெட்மி புக் 16 2024 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு டூயல் ஃபேன், 16ஜிபி ரேம், 1டிவி ஸ்டோரேஜ், 72Wh பேட்டரி, தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி-ஏ போர்ட்கள், எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி ரெட்மி புக் 16 2024 மாடலில் உள்ளது. அதேபோல் சியோமி அறிமுகம் செய்துள்ளது இந்த இரண்டு லேப்டாப் மாடல்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

16GB மெமரி.. 16-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது Redmi லேப்டாப்..

சியோமி ரெட்மி புக் 14 2024 மாடலின் ஆரம்ப விலை 4199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.50,200). அதேபோல் சியோமி ரெட்மி புக் 16 2024 மாடலின் ஆரம்ப விலை 4399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,500). சில்வர் மற்றும் ஸ்டாரி கிரே நிறங்களில் சியோமி ரெட்மி புக் 14 2024 மாடல் கிடைக்கும். பின்பு ஸ்டாரி கிரே நிறத்தில் சியோமி ரெட்மி புக் 16 2024 மாடல் கிடைக்கும்.

சியோமி ரெட்மி புக் 14 2024 மாடல் ஆனது தற்போது சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் 1-ம் தேதி சியோமி ரெட்மி புக் 16 2024 மாடல் சீனாவில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
xiaomi redmi book 14 redmi book 16 2024 launched: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X