Home
Computer

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!

சியோமி நிறுவனம் அசத்தலான சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி 2022 ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த சியோமி லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி

சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி

குறிப்பாக இந்த லேப்டாப் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் இந்த சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி மாடல். அதேபோல் இந்த
லேப்டாப் மாடலில் ஃபுல் எச்டி டிஸ்பிளே இருப்பதால் பயன்படுத்துவற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி

அதேபோல் மென்மையான அனிமேஷன்கள்/UI மற்றும் உயர்ந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் இந்த புதிய சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப். குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

 இன்டெல் கோர் பிராசஸர்

இன்டெல் கோர் பிராசஸர்

அதாவது புதிய சியோமி லேப்டாப் ஆனது 12வது ஜெனரல் இன்டெல் கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் பிரத்யேக கிராபிக்ஸ் கார்டுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

512ஜிபி அல்லது 1டிபி ஸ்டோரேஜ்

512ஜிபி அல்லது 1டிபி ஸ்டோரேஜ்

சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி அல்லது 1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய லேப்டாப் மெலிதான வடிவமைப்புடன் அறிமுகமாகும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ப்ளூடூத் v.5.2 மற்றும் வைஃபை 6, யுஎஸ்பி ஏ 3.2, ஜென் 2 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், தண்டர்போல்ட் 4, 3.5 மி.மீ.ஹெட்ஜாக்மற்றும் 1 x HDMI 2.1 போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி லேப்டாப் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

80Whr பேட்டரி

80Whr பேட்டரி

சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மாடலில் 80Whr பேட்டரி ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த லேப்டாப் உயர் தெளிவுத்திறன் கொண்ட வெப் கேமராவைக் கொண்டிருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மேலும் சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் ஆனது பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக இந்த லேப்டாப் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Notebook Pro 120G Laptop to Launch in India on August 30: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X