15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் சியோமி மி நோட்புக் ப்ரோ அறிமுகம்.!
இந்த லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் இப்போது புதிய சியோமி மி நோட்புக் ப்ரோ என்ற லேப்டாப் மாடல் ஒன்றை அறிமுடுகப்படுத்தியுள்ளது, இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, பல மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஹர்மான் இன்னினைட்டி ஸ்பீக்கர்கள் இவற்றுள் அடக்கம் சிறந்த ஒலி அமைப்பு கொண்டதாக உள்ளது இந்த லேப்டாப் மாடல். சீன சந்தையில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த லேப்டாப்.

15.6-இன்ச் டிஸ்பிளே:
இந்த லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த லேப்டாப் மாடல் கிடைக்கிறது.

இன்டெல் கோர் :
எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16ஜிபி ஆப் 2400எம்எச்இசெட் டிடிஆர்4 ரேம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது, ஒருங்கிணைக்கப்பட்ட கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-ஏ 3.0, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டால்பி அட்மோஸ் :
இவற்றுள் ஹர்மான் இன்னினைட்டி ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் டால்பி அட்மோஸ் ஆடியோ பயன்பாடு மிக அருமையாக இருக்கும்
எனக் கூறப்படுகிறது.

60வாட்ஸ்:
இந்த சியோமி மி நோட்புக் ப்ரோ பொதுவாக 60வாட்ஸ் பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் விரைவில் சார்ஜ் ஆகும் தன்மையைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.


Click it and Unblock the Notifications