12.5-இன்ச் டிஸ்பிளேவுடன் மிரட்டலான சியோமி மி நோட்புக் ஏர் அறிமுகம்.!
12.5-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி நோட்புக் ஏர் மாடலின் விலைப் பொறுத்தவரை (இந்திய விலை மதிப்பில்) ரூ.42,000-ஆக உள்ளது.
அசுஸ், டெல் நிறுவனங்களை தொடர்ந்து தற்சமயம் சியோமி நிறுவனம் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, தற்சமயம் சீனாவில் 12.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் சியோமி மி நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் விரைவில் இந்த லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
சியோமி மி நோட்புக் ஏர் பொதுவாக 12.5-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 5.71எம்எம் தடிமன் மெல்லிய பெசல்ஸ் வடிவமைப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
இந்த சாதனம் 4ஜிபி ரெம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுட் வெளிவந்துள்ளது, பின்பு 7-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 செயலியைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடல் பொதுவாக 11.5 மணி நேரம் தாங்கக்கூடிய பேட்டரி அமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு விண்டோஸ் 10 இயங்குதளம், யுஎச்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
12.5-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி நோட்புக் ஏர் மாடலின் விலைப் பொறுத்தவரை (இந்திய விலை மதிப்பில்) ரூ.42,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications