12.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சியோமி மி நோட்புக் ஏர் சாதனம் அறிமுகம்.!
குறிப்பாக இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 12.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 8-வது ஜென் இன்டெல் கோர் அம்சங்களுடன் சியோமி மி நோட்புக் ஏர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 12.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 7-வது ஜென் இன்டெல் கோர் சியோமி மி நோட்புக் ஏர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் 8-வது ஜென் இன்டெல் கோர் அம்சங்களுடன் இந்த புதிய மி நோட்புக் ஏர் சாதனம்
வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே
புதிய சியோமி மி நோட்புக் ஏர் சாதனம் பொதுவாக 12.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 x 1920 பிக்சல் திர்மானம், 5.71எம்எம் பெசல்ஸ் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான மி நோட்புக் ஏர் மாடல்.

டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட்
இந்த புதிய சியோமி சாதனம் டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் டெக்னலாஜி மற்றும் ஹர்மன் முழு-அளவிலான ஸ்பீக்கர்கள் உடன் பேக்லைட் ஸ்பீக்கர் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மி நோட்புக் ஏர் சாதனம் 8-வது ஜென் இன்டெல் சிப்செட் வசதியுடன் புதிய கோர் எம்3 மற்றும் கோர் ஐ5 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இன்டெல் கோர் எம்3 மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. அதேபோல் இன்டெல் கோர் ஐ5 மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

யுஎஸ்பி டைப்-சி போர்ட்
குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி பைட-ஏ போர்ட், ஹெட்போன் ஜாக், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் சியோமி மி நோட்புக் ஏர் 1.07கிலோ எடை கொண்டு வெளிவந்துள்ளது.

விலை
புதிய சியோமி மி நோட்புக் ஏர் சாதனம் தங்கம், சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.37,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications