பட்ஜெட் விலையில் சியோமி மி நோட்புக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான சாதனங்களை அறிமுகம் செய்வதால் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெருகிறது. அதன்படி சியோமி நிறுவனம் புதிய மி நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் இந்த நோட்புக் மெட்டல் சேசிஸ் மெல்லிய யுனிபாடி கொண்டிருக்கிறது. பின்பு இதில் பிரிண்ட் செய்யப்பட்ட கீ டெக்ஸ்ட் மற்றும் சிசர்-ஸ்விட்ச் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் பிரத்யேக நம்பர் பேட் வழங்கப்படவில்லை.

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடல் ஆனது 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920x1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

இந்த சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-10110யு பிராசஸர் வசதி மற்றும் இன்டெல் UHD கிராபிக்ஸ் 620 வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடலில் 8ஜிபி DDR4 2666MHz ரேம் மற்றும் 256ஜிபி SATA எஸ்எஸ்டி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு விண்டோஸ் 10 ஹோம் எடிஷன் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய சாதனத்தில் 46 வாட் பேட்டரி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 65 வாட் அடாப்டர் உடன் வெளிவந்துள்ளது இந்த மி நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன்.

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடல் ஆனது இன் பில்ட் ஹெச்டி வெப்கேமரா, வைபை, ப்ளூடூத் 5, 2 x யுஎஸ்பி 3.1, 1 x யுஎஸ்பி 2.0, 1 x ஹெச்டிஎம்ஐ 1.4டி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடல் ஆனது அமேசான் மற்றும் மி வலைதளங்களில் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications