Home
Computer

ரூ.8,999 க்கு சியோமி ரெட்மி நோட் டேப்ளெட், நாளை முதல் முன்பதிவு துவங்குகிறது...

By Meganathan

சியோமி நிறுவனம் இந்தாண்டு ரெட்மி 1எஸ் ஸ்மார்ட்போனை வெளியிடும் போதே ரெட்மி நோட் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி இந்தியாவில் ரெட்மி நோட்டின் விலை ரூ.8,999 என நிர்னயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.8,999 க்கு சியோமி ரெட்மி நோட் டேப்ளெட்

குறைந்த காலத்திலேயே இந்தியாவில் பிரபலமான சியோமி நிறுவனம் விரைவில் எம்ஐ4 ஸ்மார்ட்போனையும் வெளியிட இருக்கின்றது. ரெட்மி 1 எஸ் விற்பனை அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் ரெட்மி நோட் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் மூலம் நாளை துவங்க உள்ளது. 3ஜி வகை ரெட்மி நோட் டிசெம்பர் 3 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும். 4ஜி எல்டிஈ மாடல் ஏர்டெல் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். ஆப்லைன் மூலம் விற்கப்படும் முதல் வகை என்பதும், 4ஜி ரெட்மி நோட் விலை ரூ. 9,999 என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே 1280*720 பிக்சல், ஐபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட ஸ்கிரீன் பேனல் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளது.

மேலும் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸரும், 4ஜி எல்டிஈ ரெட்மி நோட் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 சிப்செட் மற்றும் 2ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் பேப்ளெட் டூயல் சிம் வசதியும் 4ஜி கொண்ட மாடலில் சிங்கிள் சிம் வசதியும் இருப்பதோடு 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் ஆக்டாகோர் வகையை சேர்ந்தது 32 ஜிபியும் 4ஜி வசதி கொண்டதில் 64 ஜிபி கூடுதல் மெமரி வசதியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Launches Redmi Note at Rs 8,999. Here you will find the full specification of the new Xiaomi Redmi Note which is launched for Rs 8,999.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X