சியோமியின் புதிய மி நோட்புக் லேப்டாப் மாடல் அறிமுகம்: (விலை & அம்சங்கள்).!
மி நோட்புக் லேப்டாப் மாடல் பொறுத்தவரை 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
சியோமி நிறுவனம் இன்று புதிய நோட்புக் லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக 8-வது ஜென் இன்டெல் செயலிகளுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் லேப்டாப் மாடலை விட சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.

தற்சமயம் இந்த லேப்டாப் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் சீனாவில் மி நோட்புக் லேப்டாப் விற்பனை துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
மி நோட்புக் லேப்டாப் மாடல் பொறுத்தவரை 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் தற்சமயம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டெல் கோர்:
8-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 மற்றும்ஐ7 செயலிகளை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல், மேலும் 8ஜிபி ரேம் மற்றும் கிராபிக்ஸ் துறைகளில் VRAM 2GB உடன் ஒரு என்விடியா ஜியிபோர்ஸ் MX110 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
இந்த மி நோட்புக் லேப்டாப் சாதனம் யுஎஸ்பி 3.0 போர்ட்,எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈத்தர்நெட் போர்ட், எஸ்டி கார்டு ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி மற்றும் டிசி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:
மி நோட்புக் லேப்டாப் மாடலில் 3வாட் ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது, அதன்படி டால்பி ஆடியோ போன்ற வசதிகள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.40,800-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications