கைரேகை ஸ்கேனர் வசதியுடன் விற்பனைக்கு வரும் சியோமி லேப்டாப்: விலை எவ்வளவு தெரியுமா?
தற்சமயம் இந்த சாதனம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்திய சந்தையில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது சியோமி நிறுவனம். மேலும் இப்போது சியோமி ஸ்மார்ட் டிவி மாடலுன் இரண்டு லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதில் 13.3-இன்ச்
கொண்ட மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.
13.3-இன்ச் மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம், பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் விரைவாக சார்ஜ் ஆகும் வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
13.3-இன்ச் மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடல் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப்பின் திரை 170 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 309.6x210.9x14.8mm பரிமாணத்தை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செயலி
இந்த சாதனத்தில் இன்டெல் கோர் ஐ3 செயலி மற்றும்8 GB of DDR4 RAM இடம்பெற்றுள்ளது, பின்பு ருர்பு கிராபிக்ஸ் 620 கிராபிக்ஸ் அட்டைடன் வருகிறது மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடல். எனவே கேமிங், வீடீயோ போன்ற வசதிகளுக்கு இந்த லேப்டாப் சிறந்த அனுபவம் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி
குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் 40வாட்ஸ் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ள, பின்பு சிங்கிள் சார்ஜில் 9.5மணி நேரம் பயன்படுத்த முடியும். மேலும் மி நோட்புக் ஏர் லேப்டாப் ஒரு டிஜிட்டல் மைக்ரோபோன்மற்றும் டால்பி ஆடியோ மற்றும் AKG தனிப்பயனாக்கப்பட்ட இரட்டை ஸ்பீக்கர் ஆதரவுகளை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடல், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 2 யுஎஸ்பி 2.0 போர்ட்,மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, 3.4எம்எம் ஆடியோ ஜாக்,வைஃபை, ப்ளூடூத் 4.1 மற்றும் கேமரா போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

விலை:
தற்சமயம் இந்த சாதனம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.37,982-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications