சீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம்.!

இந்த லேப்டாப்பில் ஒரு ஒட்டுமொத்த உலோக ஒற்றை உடலமைப்பு அமைப்பை பெற்று, ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய வரிசையில் உள்ள மேக்புக் ப்ரோவை ஒத்தாற் போல காணப்படுகிறது.

|

இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த சியோமி மீ நோட்புக் ப்ரோ இப்போது அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம்.!

சீனாவில், சியோமி மீ நோட்புக் ப்ரோவை மேம்பட்ட உள்ளக ஹார்டுவேர்கள் உடன் சிறப்பான முறையில் சியோமி நிறுவனம் மேம்படுத்தி உள்ளது. இந்த துவக்க நிலை சாதனம், சீனாவில் 5590 யென் (ரூ.56 ஆயிரம்) என்ற விலை நிர்ணயத்தில் விற்பனைக்கு வந்துள்ளதோடு, உயர்ந்த கட்டமைப்பு கொண்ட மாடல்களின் தன்மையை வெளியிட உள்ளது. இந்த லேப்டாப், வரும் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து சியோமி மீ 8, சியோமி மீ 8 எஸ்இ, சியோமி மீ பேண்டு 3 ஆகியவற்றுடன் சேர்ந்து சீனாவில் கிடைக்கப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வடிவமைப்பு

சியோமி மீ நோட்புக் ப்ரோவின் முதல் தலைமுறையை வைத்து பார்க்கும் போது, இதன் இரண்டாவது தலைமுறையின் வடிவமைப்பில் ஒரு தனித்தன்மை தெரிகிறது. இதன் ஒட்டுமொத்த அமைப்பு தன்மைகளைப் பார்த்தால், "இது இல்லை என்றால் உடைத்து போடுங்கள், அதை அமைக்க வேண்டாம்" என்ற வாக்குமூலத்தை சியோமி நிறுவனம் பின்பற்றி இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

இந்த லேப்டாப்பில் ஒரு ஒட்டுமொத்த உலோக ஒற்றை உடலமைப்பு அமைப்பை பெற்று, ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய வரிசையில் உள்ள மேக்புக் ப்ரோவை ஒத்தாற் போல காணப்படுகிறது. அதே நேரத்தில், மேக்புக் ப்ரோ போல இல்லாமல், மீ நோட்புக் ப்ரோவில் முழு அளவிலான யூஎஸ்பி 3.0, ஹெச்டிஎம்ஐ, எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜெக் உள்ளிட்ட போர்டுகளைக் காண முடிகிறது.

சீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம்.!

சிறப்பம்சங்கள்
இன்டெலின் 8வது தலைமுறையைச் சேர்ந்த கோர் ஐ5-8250யூ செயலி மூலம் இயக்கப்படும் இந்த லேப்டாப், அதனுடன் 8 ஜிபி எல்பிடிடிஆர்4 ரேம் மற்றும் 256 ஜிபி அளவுள்ள பிசிஐஇ அடிப்படையிலான சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பின் கிராஃபிக்கல் தேவைகள், ஜிஃபோர்ஸ் 2 ஜிபி டிடிஆர்5 நினைவகத்துடன் கூடிய எம்எக்ஸ்150 ஜிபியூ மூலம் கையாளப்படுகிறது.

இந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த சியோமி மீ நோட்புக் ப்ரோவில், சிறப்பான 15.6 இன்ச் டிஸ்ப்ளே உடன் குறுகலான பேசல் வடிவமைப்பு மூலம் 1920x1080பி பகுப்பாய்வு எஃப்ஹெச்டி உடன் கண் கூசாத திரை தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது. இதனால் ஒளி பிரதிபலிப்பு வெகுவாக குறைக்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே மூலம் 300நிட்ஸ் என்ற அதிகபட்ச ஒளிர்வு கிடைப்பதோடு, 170 கோணத்தில் அமைந்த கோண காட்சியைப் பெற முடிகிறது. ஒரு 15.6 இன்ச் சாதனமான இதில் ஒரு சிறிய புட்பிரிண்டு காணப்படுவதோடு, 360.7 x 243.6 x 15.9மிமீ என்ற அளவுகளைப் பெற்றுள்ளது. மேலும் 1.95 கிலோ கிராம் எடைக் கொண்டுள்ளது.

இதுவரை நாங்கள் பார்த்துள்ள விண்டோஸ் பயன்படுத்தும் லேப்டாப்களில் தாராளமான டிராக்பேடுகளைக் கொண்ட லேப்டாப்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. மேலும் மேலே வலது மூலையில் ஒரு கைரேகை சென்ஸர் அளிக்கப்பட்டு, விண்டோஸ் ஹலோ அம்சத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த நோட்புக்கில் 64 புட் விண்டோஸ் 10 ஓஎஸ் உடன் எல்லா தரமான அம்சங்களையும் கூட்டாகப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கப் பெறும் இந்த லேப்டாப், விண்டோஸ் 10-னின் சீனா பதிப்பு கொண்டதாக இருக்கும். இதனால் இதை இறக்குமதி செய்தால், ஓஎஸ்-ன் சர்வதேச அல்லது ஆங்கில பதிப்பை, பயனர் நிறுவன வேண்டிய நிலை ஏற்படும்.

சீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம்.!

முடிவு
சியோமி மீ 8 என்ற தனது முன்னணி ஸ்மார்ட்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது குறித்து, ஏற்கனவே சியாமி நிறுவனம் உறுதி செய்து உள்ளது. இதனால் சியாமி நிறுவனத்தால் தயாரிப்பில் வரும் திறன் மிகுந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி மகிழ, சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, வடிவமைப்பு மற்றும் அதன் சிறப்பம்சங்களின் மூலம் நாம் அளிக்கும் பணத்திற்கு தகுந்த மதிப்பு கொண்டதாக, மீ நோட்புக் ப்ரோ காணப்படுகிறது.
Best Mobiles in India

English summary
Xiaomi 2nd Gen Mi Notebook Pro officially launched for Rs 56,000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X