இணையம் பயன்படுத்துவோர் அதிகரிப்பு...!

Written By:

இன்றைக்கு இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

ஸ்மார்ட்போன், டேப்ளட், பிசி இப்படி பல வழிகளில் இணையத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

மேலும், உலக அளவில் ஏற்படும் வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவில், ஆறு மடங்கு வேகத்தில் இணையமக்கள் தொடர்பு உயர்ந்து வருவதாக, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இணையம் பயன்படுத்துவோர் அதிகரிப்பு...!

எனவே தான், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலக அளவில் மூன்றாவது இடத்தை இணையப் பயன்பாட்டில் பெற்றுள்ளது.

இந்திய இணையப் பயனாளர்களில் 35 சதவீதம் பேர், 35 வயதுக்குக் குறைவானவர்களாக உள்ளனர். பெண்களில் 35 முதல் 44 வயதுள்ளவர்கள், அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இவர்கள் ஆண்களைக் காட்டிலும் குறைவாகவே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மொத்த இணையப் பயனாளர்களில், 39% பேர் மட்டுமே பெண்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot