Home
Computer

குறைந்த தடிமன் கொண்ட சாம்சங் டேப்லெட்டுகள்!

By Super

குறைந்த தடிமன் கொண்ட சாம்சங் டேப்லெட்டுகள்!
சாம்சங் நிறுவனம் புதிதாக சாம்சங் கேலக்ஸி டேப் 730 மற்றும் 750 என்ற இரண்டு புதிய டேப்லெட்டுகளை களமிறக்கி இருக்கிறது. இந்த 2 டேப்லெட்டுகளுமே 3ஜி இணைப்பு கொண்டு வருகின்றன.

டேப்லெட் சந்தை அதிவிரைவாக வளர்ந்து வருவதால் இந்த லேப்லெட்டுகள் இந்திய சந்தையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பும் உள்ளன. இந்த இரண்டு டேப்லெட்டுகளின் முக்கிய சிறப்பு என்னவென்றால் அவை மிக மெல்லியதாகவும், எடை குறைந்ததாகவும் இருக்கின்றன.

கேலக்ஸி டேப் 730ன் மொத்த பரப்பு 230.9மிமீ X 157.8மிமீ X 8.6மிமீ ஆகும்.இதன் மொத்த எடை 465 கிராம்கள் மட்டுமே. ஆனால், கேலக்ஸி டேப் 750 மாடலின் எடை 565 கிராம்களாகும். இந்த இரண்டு டேப்லெட்டுகளும் க்லோசி கருப்பு, வெள்ளி மற்றும் க்ரே நிறங்களில் வருகின்றன.

கேலக்ஸி டேப் 730, 8.9 இன்ச் திரையையும், கேலக்ஸி டேப் 750, 10.1 இன்ச் திரையையும் கொண்டுள்ளது. இந்த திரைகளின் பிக்சல் ரிசலூசன் 1280 x 800 ஆகும். இந்த பிக்சலின் அடர்த்தி ஒரு இன்ச்சுக்கு 149 பிக்சல்களாகும். எனவே, இதில் வீடியோ பார்க்கும் போது மிகத்துல்லியமாக இருக்கும்.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 2 கேமராக்களைக் கொண்டு வருகின்றன. அதாவது இவற்றின் முக்கிய கேமரா 3.15 மெகா பிக்சல் ஆகும். இவற்றின் இரண்டாவது கேமரா 2 மெகா பிக்சல் ஆகும். இந்த கேமராக்கள் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்டிருப்பதால் இருளிலும் மிகத் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

இவற்றின் முக்கிய கேமரா 2048 x 1536 பிக்ஸல் வீடியோவை ரிக்கார்ட் செய்யும். அதே நேரத்தில் டிஜிட்டல் சூம் வசதியையும் வழங்கும். இவற்றின் துணை கேமராவின் உதவியோடு வீடியோ கான்பரன்சிங் செய்யலாம்.

இந்த டேப்லெட்டுகள் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி இண்டர்னல் மெமரிகளோடு வருகிறது. ஆனால் எக்ஸ்டர்னல் மெமரி கிடையாது. அதனால் இதை வாங்குவோர் தமது விருப்பத்திற்கு தகுந்த மெமரி கொண்ட டேப்லெட்டை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த டேப்லட்டிகளின் சிஸ்டம் மெமரி 1ஜிபி ஆகும். அதுபோல் இவை என்விஐடிஐஏ டெக்ரா டூவல் கோர் 1 ஜிகா ஹெர்ட்ஸ் அப்ளிகேசன் ப்ராசஸர் கொண்டு வருகிறது. அதனால் மல்டிமீடியா மற்றும் வெப் அனுபவம் மிக சிறப்பாக இருக்கும்.

இவற்றின் இயங்குதளம் ஆண்ட்ராய்டு ஹனிகோம்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் இந்த 2 டேப்லெட்டுகளின் பேட்டரி 7000 எம்எஎச் மின்திறன் கொண்டு வருகிறது. அதனால் இதில் 9 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ பார்த்தாலும் அதன் பேட்டரி தாங்கும் வலிமை கொண்டுள்ளது.

கேலக்ஸி 730 மற்றும் 750 நவீன டச்விஸ் யுஎக்ஸ் யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. லைவ் பேனல் மெனுவும் கொண்டு வருகிறது. இவற்றின் யூசர் இன்டர்பேஸ் டாஸ் மேனேஜர் மற்றும் மியூசிக் ப்ளேயர் கொண்டு வருகிறது.

இதில், கேலக்ஸி டேப் 730 மாடல் ரூ.33,900க்கும், கேலக்ஸி டேப் 750 மாடல் ரூ.36,200க்கும் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X