ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்..

By Meganathan
|

கம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப சந்தையானது சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் அமெரிக்க மின்சாதன நிறுவனமான இன்ஃபோகஸ் கங்காரு எனும் புதிய வகை கணினியை சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது.

சாதனை

சாதனை

உலகின் சிறிய கணினி என்ற பெருமையை கொண்டிருக்கும் இந்த கணினி 124 எம்எம் நீளம், 80.5 எம்எம் அகலமும் 12.9 எம்எம் சுற்றளவும் கொண்டிருக்கின்றது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த கணினியில் கழற்ற கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், டிசி பவர் போர்ட் வழங்கப்பட்டுள்ளதோடு இதன் மொத்த எடை 200 கிராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

கங்காரு கணினியில் விண்டோஸ் ஹெல்லோ கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

கங்காரு கணினியில் குவாட் கோர் செர்ரிடிரயல் ஆடம் எக்ஸ்-5-இசட்8500 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

2 ஜிபி ரேம், மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியோடு கூடுதலாக 128 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

நான்கு மணி நேரம் வரை பேக்கப் வழங்கும் பேட்டரியும், சார்ஜ் செய்ய மைக்ரோ-யுஎஸ்பி போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

மென்பொருள்

கங்காரு கணினி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

இந்த சிறிய கணினியில் வை-பை 802.11ac மற்றும் ப்ளூடூத் 4.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இந்தியாவில் கங்காரு கணினியின் விலை ரூ.6,500 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனை

விற்பனை

நவம்பர் மாதத்தின் மத்தியில் மைக்ரோசாப்ட் ஸ்டோர் மூலம் கங்காரு கணினி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இண்டர்நெட்

இண்டர்நெட்

இந்த கருவியை கொண்டு இண்டர்நெட் ப்ரவுசிங், வீடியோ கேம், மற்றும் ஃபுல்-எச்டி வீடியோ உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
World's Smallest Portable Windows 10 PC launched. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X