டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு இணையான வசதிகளுடன் வரும் டேப்லெட்

By Super
|
டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு இணையான வசதிகளுடன் வரும் டேப்லெட்
இந்தியாவின் குர்கானில் உள்ள மிலாகுரோவ் பிசினஸ் மற்றும் நாலெட்ஜ் சொலுசன்ஸ் என்ற நிறுவனம் டேப்லெட் உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான டேப்லெட் போல தோன்றினாலும் இந்த டேப்டாப் பிசியின் ஹார்டுவேர் மற்ற டேப்லட்டுகளை விட கூடுதல் வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டில் (டேப்டாப்) யுஎஸ்பி போர்ட், எஸ்டி கார்ட் ரீடர் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது எ2918 1.2ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டிருக்கிறது. மேலும் இதன் 32ஜிபி மாடல் 1ஜிபி டிடிஆர்3 ரேம் கொண்டும் இதன் 16ஜிபி மாடல் 512எம்பி டிடிஆர்3 ரேமும் கொண்டுள்ளது. இதன் அருமையான மல்டி டச் டிஸ்ப்ளே 1024x768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது.

இந்த டேப்டாப் ஆன்ட்ராய்டு 2.3.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. குறிப்பாக மற்ற டேப்லட்டுகளைவிட வியாபாரம் மற்றும் பயணத்தில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு இந்த புதிய டேப்டாப் பெரிதும் உதவியாக இருக்கும்.

இதன் பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்தால் இந்த டேப்டாப் ஒரு முழுமையான எச்டி 1080பி வீடியோவை ரிக்கார்ட் செய்யும். அதுபோல் இது அடோப் ப்ளாஷ் 11ஐ சப்போர்ட் செய்யும். மேலும் இதன் 5000 எம்எஎச் பேட்டரி 10 மணி நேரம் தாங்கும் சக்தியைக் கொண்டிருக்கிறது.

மேலும் இது 3ஜி வசதிகளையும் சப்போர்ட் செய்யும். மேலும் இதன் 2 மெகா பிக்சல் பியர் கேமரா மிகவும் சூப்பராக இருக்கிறது. அதுபோல் இதன் விஜிஎ முகப்பு கேமார வீடியோ கான்பரன்சிங் செய்வதற்கும் மிக உதவியாக இருக்கும்.

மேலும் இந்த டேப்டாப் நெட்வொர்க்கிங், யூட்டிலிட்டி, பாதுகாப்பு, பெண்கள், பொருளாதாரம், மருத்துவம், கல்வி, மீடியா போன்ற 50க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்களை பிரீலோட் செய்து வைத்திருக்கிறது.

இந்த புதிய டேப்டோப் ஒரு இந்திய படைப்பாக இருப்பதால் அது இந்தியாவில் கடுமையான போட்டியை கொடுக்கும் என நம்பலாம். மிலாக்ரோவின் சீஈஒ ராஜீவ் கர்வால் கூறும்போது இதன் 16ஜிபி டேப்டாப் ரூ.25,000க்கும் 32ஜிபி டேப்டாப் ரூ.29,500க்கும் கிடைக்கும் என்று கூறுகிறார்.

மேலும் கர்வால் கூறும் போது பல டேப்லட்டுகள் குறைந்த விலையில் வந்தாலும் அவற்றில் போதுமான தொழில் நுட்பங்களும் வசதிகளும் இருப்பதில்லை என்கிறார். அதுபோல் அவை குறிப்பாக வேலையில் ஈடுபடுவோரின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதில்லை. அதுபோல் அவர்கள் பயணம் செய்யும் போது தமது வேலைகளை செய்வதற்கு ஒரு லேப்டாப்பை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.

ஆனால் இந்த புதிய டேப்டாப் இப்படிப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது. அதனால் அவர்கள் பயணத்தின் போது லேப்டாப்பை எடுத்துச் செல்லத் தேவையில்லை. ஏனெனில் இந்த டேப்டாப் அவர்களது எல்லா வேலைகளையும் எளிதாக முடித்துவிடும் என்கிறார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X