Home
Computer

ரூ.1,500க்கு உலகின் குறைந்த விலை 'டேப்லெட் கம்ப்யூட்டர்' இந்தியாவில் அறிமுகம்

By Super
ரூ.1,500க்கு உலகின் குறைந்த விலை 'டேப்லெட் கம்ப்யூட்டர்' இந்தியாவில் அறிமுகம்
ரூ.1,500 எனும் நம்ப முடியாத விலையில் உலகின் மிகக் குறைந்த விலை கையடக்கக் கணினி(டேப்லெட் கம்ப்யூட்டர்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கபில் சிபல் இந்த டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கையடக்கக் கணினியை பிரிட்டனை சேர்ந்த டேட்டா வைண்டு நிறுவனம் தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் 1,00,000 லட்சம் மாணவர்களுக்கு இந்த டேப்லெட் கம்ப்யூட்டரை மத்திய அரசு மானியத்துடன் ரூ.1,500 விலையில் வழங்க இருக்கிறது.

வரும் நவம்பர் மாதம் முதல் இந்த கையடக்க கணினி வர்த்தக ரீதியிலும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டேட்டா வைண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் டேப்லெட் கம்ப்யூட்டர் முழுக்க முழுக்க பாடத்திட்டத்துக்கு உதவும் வகையில் இருக்கும்.

ஆனால், வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் டேப்லெட்டில் 3ஜி வசதியுடன் வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ 2.2 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த டேப்லெட் 7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் டேப்லெட்டுக்கு ஏர்செல் நிறுவனம் சிம் கார்டுகளை வழங்க இருப்பதாக டேட்டா வைண்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வர்த்தக ரீதியில் இந்த டேப்லெட் ரூ.3,000 விலையில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் டேட்டா வைண்டு தெரிவித்துள்ளது.

தற்போது இந்திய மார்க்கெட்டில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான பீட்டெல் நிறுவனம் ரூ.9,999க்கு டேப்லெட் கம்ப்யூட்டரை விற்பனை செய்து வருகிறது. இதுவரை இந்த டேப்லெட் கம்ப்யூட்டரே இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலை டேப்லெட்டாக இருக்கிறது.

இந்த நிலையில், விரைவில் வர்த்தக ரீதியில் ஆகாஷ் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டால் மற்ற நிறுவனங்களின் டேப்லெட்டுகளுக்கு அது கடும் சவாலையும், போட்டியையும் ஏற்படுத்தும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X