Home
Computer

முழுவீச்சில் மார்கெட்டில் அடியெடுத்து வைக்கும் விஷ்டெல் டேப்லட்!

By Super

முழுவீச்சில் மார்கெட்டில் அடியெடுத்து வைக்கும் விஷ்டெல் டேப்லட்!
விஷ்டெல் நிறுவனம் ஒரு புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. விஷ்டெல் நிறுவனம் புதிதாக 8 இஞ்ச் திரை கொண்ட இரா ஐபோன் எச்டி என்ற பெயர் கொண்ட டேப்லட்டினை வெளியிட்டுள்ளது.

அதிகமான டேப்லட்கள் 7 இஞ்ச் திரை கொண்டதாக தான் இருக்கிறது. சில டேப்லட்கள் 9 மற்றும் 10 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கின்றன. அந்த வகையில் விஷ்டெலின் புதிய டேப்லட் 8 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதில் 1024 X 768 பிக்ஸல் திரை துல்லியம் வழங்கும்.

இந்த டேப்லட் அனைவரையும் தொழில் நுட்பத்தில் ஈர்க்கும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். இதில் 3ஜி மற்றும் ப்ளூடூத் வசதியினையும் சிறப்பாக கொடுக்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதியினையும சிறப்பாக கொடுக்கும். இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் வசதியினையும் சிறப்பாக பெறலாம்.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த டேப்லட்டிற்கு அதிகமான ஆற்றலை வழங்க இதில் 6,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொடுக்கும். மைக்ரோ யூஎஸ்பி, மைக்ரோஎஸ்டி, மினி எச்டிஎம்ஐ மற்றும் 3.5 எம்எம் ஸ்டீரியோ வசதியினையும் பெறலாம். இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் பெறலாம்.

இந்த டேப்லட் 8 இஞ்ச் திரை வசதியினை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் இதில் டியூவல் கேமராவினையும சிறப்பாக கொடுக்கும். இந்த டேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும கொடுக்கும். இரா ஐகான் எச்டி டேப்லட்டில் ரூ. 12,999 விலை கொண்டதாக இருக்கும்.

இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்கலாம்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X