Home
Computer

விஷ்டெல் வழங்கும் அருமையான புதிய ஆன்ராய்டு டேப்லெட்

By Karthikeyan
விஷ்டெல் வழங்கும் அருமையான புதிய ஆன்ராய்டு டேப்லெட்

விஷ்டெல் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு இரா கமட் எச்டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ரூ.9,999க்கு விற்கப்பட இருக்கிறது.

இந்த இரா டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 10.1 இன்ச் டிஎப்டி எல்இடி மல்டி டச் கப்பாசிட்டிவ் தொடுதிரை பெரியதாகவும் அதே நேரத்தில் மிகத் துல்லியமாகவும் இருக்கும். இந்த இரா டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் பலவிதமான நவீன வசதிகளுடன் வரும் என்று நம்பலாம்.

அதோடு இந்த டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகம் தாறுமாறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த டேப்லெட் 8ஜிபி மெரியுடன் வருகிறது. இந்த மெமரியை 32ஜிபி அளவிற்கு அதிகரிக்க முடியும்.

மேலும் இந்த டேப்லெட்டில் இருக்கும் 2எம்பி பின்பக்க கேமரா மற்றும் விஜிஎ முகப்பு கேமரா ஆகியவற்றின் மூலம் சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதோடு அருமையான வீடியோ உரையாடலையும் நடத்த முடியும். அதோடு இதில் 1080பி எச்டி கன்டென்டுகளையும் பார்க்கலாம்.

இந்த டேப்லெட்டிலிருக்கும் பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் 3ஜி, யுஎஸ்பி மற்றும் வைபை போன்ற இணைப்பு வசதிகளைப் பார்க்கலம். அதோடு இதில் எச்டிஎம்ஐ கேபிள், வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் கார்டு ரீடர் போன்ற வசதிகளையும் அனுபவிக்க முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X