விப்ரோ களமிறக்கிய ஸ்லிம் லேப்டாப்!

By Karthikeyan
|
 விப்ரோ களமிறக்கிய ஸ்லிம் லேப்டாப்!

இந்தியாவில் மென்பொருள் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் விப்ரோ நிறுவனம் இ.கோ ஏரோ அல்ட்ரா என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலேயே இந்த புதிய லேப்டாப்தான் மிகவும் மெல்லிய லேப்டாப் மற்றும் முதல் 14 அல்ட்ராபுக் என்று அந்நிறுவனம் கருதுகிறது.

11.6 அல்ட்ரா லைட் நோட்புக்கிலிருந்து மிகவும் மெல்லிய 14 அல்ட்ராபுக் வரை இந்த புதிய இ.கோ ஏரோ வரிசையில் வரும் இந்த லேப்டாப்புகள் ஒரு காம்ரகன்சிவ் ரேஞ்சாக இருந்து எல்லா தேவைகளையும் நிறைவு செய்யும். இந்த ரேஞ்ச் இ.கோ அல்பா, இ.கோ ஏரோ புக் மற்றும் இ.கோ ஏரோ அல்ட்ரா போன்றவற்றை உள்ளடக்கி இருக்கும் என்கிறது விப்ரோ.

இ.கோ ஏரோ அல்பா ஒரு திறமை வாய்ந்த மற்றும் எடை குறைந்த நோட்புக் ஆகும். அன்றாட வேலைகளைச் செய்வதில் இந்த லேப்டாப் திறமை வாய்ந்தது. இந்த லேப்டாப் வெள்ளை நிறத்தில் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அளவில் வருகிறது.

அடுத்ததாக இ.கோ ஏரோ புக் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எடை குறைந்த லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப்பில் 2ஜி இன்ட்ல் கோர் ஐ5 ப்ராசஸர் மற்றும் ஒரு 11.6 இன்ச் எல்இடி எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இந்த லேப்டாப் மிகவும் சிறியதாக அதே நேரத்தில் மிக அழகாக உள்ளது.

அடுத்துப் பார்த்தால் இ.கோ ஏரோ அல்ட்ரா லேப்டாப் ஒரு அல்ட்ரா ஸ்லிம் அல்ட்ராபுக் டிம் ஆகும். இந்த லேப்டாப் மக்னீசியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டிசைனும் பக்காவாக உள்ளது. இதன் தடிமன் 19.3 மிமீ ஆகும். இதுதான் மிகவும் மெல்லிய 14 இன்ச் அல்ட்ராபுக்டிஎம் லேப்டாப் ஆகும்.

இந்த ஏரோ அல்ட்ரா 14 இன்ச் எல்இடி பேக்லிட் எச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதன் எடை 1.7 கிலோ மட்டுமே. மேலும் இந்த லேப்டாப் 4ஜிபி மெமரி மற்றும் 500ஜிபி ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஒஇஎம் விண்டோஸ் 7 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஸ்டார்ட்டர் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. அதுபோல் சூப்பரான கீபோர்டு மற்றும் மல்டி டச் பேடையும் கொண்டிருக்கிறது.

இந்த புதிய லேப்டாப் இன்டல் மற்றும் விப்ரோ போன்றவற்றின் கூட்டு முயற்சியினால் உருவானதாகும். இந்த லேப்டாப்பில் இன்டல் ரேபிட் ஸ்டார்ட், இன்டல் ஸ்மார்ட் ரெஸ்பான்ஸ் மற்றும் இன்டல் ஸ்மார்ட் கனக்ட் போன்ற இன்டலின் அனைத்து தொழில் நுட்பங்களையும் தாங்கி வருகிறது. மேலும் இந்த லேப்டாப் எப்பொழும் இன்டர்நெட்டோடு இணைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். இவற்றின் விலை ரூ.39000லிருந்து 49000க்குள் இருக்கும்.

விப்ரோவின் விபி மற்றும் வர்த்தகப் பிரிவின் தலைவாரான திரு. அசோக் திருப்பதி கூறும் போது இந்த புதிய லேப்டாப் வளரும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். எல்லாவிதத்திலும் இதைப் பயன்படுத்துவோரின் தேவைகளை இந்த லேப்டாப் செவ்வனே செய்யும் என்றும் கூறுகிறார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X