வின்க்நெட் வழங்கும் ஒரு புதிய வைஃபை ரூட்டர்!

வின்க்நெட் நிறுவனம் சமீபத்தில் ஒரு வைபை ரூட்டரை சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த சாதனத்திற்கு எம்எப்50 3ஜி பாக்கெட் வைபை ரூட்டர் என்று பெயர் சூட்டப்பட்டியிருக்கிறது. இந்த புதிய சாதனம் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக அதிகமாக பயணத்தில் இருக்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை குறிவைத்து இந்த புதிய சாதனம் வருகிறது.
அடிப்படையில் இந்த சாதனம் ஒரு எச்எஸ்பிஏ யுஎஸ்பி மோடம் ஆகும். இது ஒரு எல்சிடி டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த திரையில் சிக்னல் மற்றும் பேட்டரியின் சார்ஜ் அளவு ஆகியவற்றை பார்க்கலாம்.
இந்த சாதனம் சிக்னல் பூஸ்டர் கொண்டிருப்பதால் சிக்னல் குறைவாக இருக்கும் போதும்கூட இன்டர்நெட் சிறப்பான வேகத்தில் இயங்கும். அதுபோல் இந்த சாதனம் 14.4 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 5.76 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் சப்போர்ட் செய்யும். அதோடு இந்த சாதனத்தை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
இதை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. அதற்காக இது ஒரு வெப் அடிப்படையிலான இன்டர்பேஸைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்த சாதனம் 10 கணினி சாதனங்களுக்கு இணைப்பு வழங்கும். மேலும் இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
இந்த சாதனம் ஜிபிஆர்எஸ் அல்லது எட்ஜ் அல்லது டபுள்யுசிடிஎம்ஓ அல்லது எச்எஸ்பிஎ ஆகிய நெட்வொர்க்குகளோடு மிக சூப்பராக வேலை செய்யும். இந்த புதிய சாதனம் ரூ.5,800க்கு விற்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications