விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

Written By:
  X

  இன்று கம்பியூட்டர் துறையில் உள்ள பெரும்பாலானோர் விண்டோஸ் 8 க்கு மாறி விட்டனர் எனலாம் ஆனாலும் ஒரு சிலர் விண்டோஸ் XP யை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

  இங்கு தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்டணம் செலுத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவதனைத் தள்ளிப்போடலாமே என்ற எண்ணமே முக்கிய காரணம்.

  ஆனால் சில உண்மைகளை நாம் எடுத்துக் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி 2001ல் வெளியானது. அடுத்து 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஒரு டஜன் ஆண்டில், ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் புதிய சிஸ்டத்திற்கு, புதிய கம்ப்யூட்டருக்கு மாறி இருக்க வேண்டும்.

  பண அடிப்படையில் பார்த்தால், எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் நான்கு மாற்றங்களுக்கு முன்னால் இருந்ததனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியும். இது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது. பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான செலவு, புதிய சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்கு மாறுவதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.

  இணையவெளியில் உலாவும் திருடர்கள், எக்ஸ்பிக்கு தொடர்ந்து குறி வைத்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருவதே. மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்சத்தில், பாதுகாப்பு எதுவும் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி மாறிவிடும். உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருட ஒரு சிறிய இமெயில் கூட போதும் என்ற நிலை உருவாகும்.

  மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டில், எக்ஸ்பி சிஸ்டத்தின் இயக்கத்திற்கு அப்டேட் எதனை யும் தராது என்பது உறுதி. எனவே பயனாளர்களுக்கு எக்ஸ்பி அவர்களின் பிடியில் இருக்காது. என்ன விளைவு ஏற்பட்டாலும் அவர்கள் மட்டுமே அதனைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  பழைய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்து இயக்கினாலும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கு முழுமையான செயல்பாடு கிடைக்காது. உங்கள் நிறுவனத் தில் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்த, உங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்தினால், தாமதமான வேலைப்பாட்டிற்கு நீங்களே வழி வகுத்து, நிறுவனத்தின் நேரம் மற்றும் உழைப்பு இழப்பிற்கு வழி வகுக்கிறீர்கள்.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  பழைய குதிரையை என்ன தட்டினாலும், அதனால் முடிந்தால்தானே ஓடும். குதிரை மீது அமர்வதற்கு புதிய சீட் வாங்கிக் கொடுத்தாலும், குதிரை பழையதாக இருந்தால், அதனால் இயன்றவரை தானே ஓடும்.

  இன்னொரு வழியில் இதனைப் பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை, நல்ல முறையில் பராமரித்தால், நீங்களே ஒரு மெக்கானிக்காக இருந்தால், தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால், எண்ணிப் பாருங்கள்.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  அந்தக் கார் அதிக மக்கள் சாலையில் செல்லாதபோது, அதிக வாகனங்கள் இயங்காதபோது, அப்போதிருந்த சூழ்நிலையில் உருவாக்கப் பட்டிருக்கும். புதிய கார்கள், அதன் பின்னர் எழுந்த தேவைகளின் அடிப்படையில், பழைய கார்களினால் ஏற்பட்ட தவறுகளின் அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கும்.

  புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப் பதால், இதுவரை எண்ணிப் பார்க்காத வசதிகள் கிடைக்கும். பழைய காரை இன்னும் ஓட்டினால், இதனை எல்லாம் இழப்பதுடன், பாதுகாப்பும் இல்லாமல் அல்லவா இருப்பீர்கள். எரிபொருளும் அல்லவா அதிகம் செலவாகும்.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  அதே போல் தான் விண்டோஸ் எக்ஸ்பியை இன்றைய சூழ்நிலையில் இயக்குவது. விண்டோஸ் எக்ஸ்பி உருவாகி வெளியான காலத்தில், கம்ப்யூட்டரின் இயங்கும் திறன் மற்றும் தன்மைக்கேற்ப, எக்ஸ்பி உருவாக்கப் பட்டது. 640 பிக்ஸெல்கள் கொண்ட திரை அகலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டது.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6க்கென உருவானது. இப்போது அது இயங்கவே முடியாது என கைவிடப்பட்ட ஒரு பிரவுசராகும். ஆனால், அதனை இயக்க உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  விண்டோஸ் எக்ஸ்பி வெளியான போது, யு.எஸ்.பி.2 சப்போர்ட் செய்யப்படவில்லை. ராம் மெமரியின் அளவு மிகக் குறைவே. 137 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் தான், அதிக பட்ச அளவாக இருந்தது. இப்போது தொடக்க நிலையே 500 ஜி.பி. ஆக தற்போது உள்ளது.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  எக்ஸ்பி பயன்படுத்தும் சிலர், தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல் இயங்காது என எண்ணுகின்றனர். எனவே தான் எக்ஸ்பி மட்டும் எங்களுக்குப் போதும் என்கின்றனர். இதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள்.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  மேலும், சரியாக இயங்காது என்று நீங்கள் எண்ணும் புரோகிராம்கள், அண்மைக் காலத்திய இயக்க முறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றப் பட்டிருக்கும். நீங்கள் அப்டேட் செய்திடாமல், அதனைக் குற்றம் சொல்லிப் பலனில்லை. புதிய பதிப்பிற்கு மாறினால், கூடுதல் வசதிகள் கிடைக்கலாம். உங்கள் அலுவலகம் மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு இதனால் அதிக லாபம் வரலாம்.

  விண்டோஸ் எக்ஸ்பி வந்த காலத்தில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஆடம்பரமான கம்ப்யூட்டிங் முறையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் என்பவை பற்றி யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். ஐபேட் போன்ற சாதனங்கள் எல்லாம், விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் மட்டுமே மிதந்தன.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  யு ட்யூப், ஸ்கை ட்ரைவ், ஜிமெயில், மை ஸ்பேஸ் என்பவை எல்லாம் அப்போது இல்லை. பயர்பாக்ஸ், உபுண்டு லினக்ஸ், ஐபாட் என்பவை எல்லாம் கேட்காத பெயர் களாகும். ஐபோனுக்கு ஐந்தாம் நிலையில் அப்டேட் செய்திடும் போது, ஐபோன் வராத காலத்தில் இருந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவையா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  எக்ஸ்பி சிஸ்டம், கம்ப்யூட்டரை இயக்கும் சாதாரண மனிதனின் தேவைகளுக்கேற்ப எளிமையாக கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த மனிதனின் வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அப்போது கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட் கிடைத்ததா? அனைத்து பண பரிமாற்றமும் நடந்தேறியதா? ஆனால், இப்போது மேற்கொள்கிறோம். அதனால், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதற்கு புதிய சிஸ்டம் வேண்டும்.

  விண்டோஸ் எக்ஸ்.பி பற்றி சில தகவல்கள்....

  பாதுகாப்பு என்ற கோணத்தில், விண்டோஸ் எக்ஸ்பிக்கென அளிக்கப்பட்ட சர்வீஸ் பேக் புரோகிராம்கள், அதன் வலிமையை இழந்துவிட்டன. விண்டோஸ் 7, எக்ஸ்பி சிஸ்டத்தின் பாதுகாப்பினைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக பாதுகாப்பானதாக உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பினைத் தருகிறது.

  விண்டோஸ் எக்ஸ்பி எனக்கு கை வந்த சிஸ்டமாகி விட்டது என்று பாட்டி கதை எல்லாம் சொல்ல வேண்டாம். கை வந்த சிஸ்டம், உங்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் எளிமையாகக் கை வந்த கலையாக உங்களிடம் ஒட்டிக் கொள்ளும்.

  எனவே, விண்டோஸ் 9 வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடாமல், எக்ஸ்பிக்கு டாட்டா சொல்லி, உயர்நிலை சிஸ்டங்களுக்கு மாறவும். கம்ப்யூட்டரையும் அதற்கேற்றார்போல் மாற்றவும். பத்து ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வேடிக்கையான அனுபவம் ஆகும். முன்பே இது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more