அடுத்த மாதம் விண்டோஸ் 8.1!!!

By Keerthi
|

கம்பியூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும்.

முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு, புதிய பதிப்பாக விண்டோஸ் 8.1 ஐ மைக்ரோசாப்ட் தருகிறது.

இது ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு, முற்றிலும் இலவசமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம், பல விஷயங்களை முதல் முதலாக இதில் மேற்கொண்டுள்ளது.

விண்டோஸ் 8.1 தொகுப்பில்தான் முதல் முதலாக மைக்ரோசாப்ட் புதிய வசதிகளை இலவசமாக அமைத்துத் தருகிறது.

இதுவரை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த தவறுகளை நீக்கும் பேட்ச் பைல்களைத்தான் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எண்ணப்போக்கிலும், செயல்முறை யிலும் ஏற்பட்ட நல்லதொரு மாற்றமாகும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அடுத்த மாதம் விண்டோஸ் 8.1!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்த புதிய செயல்பாட்டிற்குக் காரணமும் உள்ளது. முன்பு சிடி வழியாகவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தன. ஆனால், இப்போது இணையம் மூலம் எதனையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம்.

சிஸ்டத்தில் மாற்றங்களைத் தயார் செய்தால், பல மாற்றங்களை இணைத்து, பெரிய அளவில் அப்டேட் ஆகத் தராமல், எப்போதெல்லாம் புதிய வசதிகள் வடிவமைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், உடனுக்குடன், அவற்றை இணையம் வழியாகத் தரலாம்.

மேலும் வாடிக்கையாளர்களை என்றென்றும் தங்களுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கையில், மாற்றங்களுடன் கூடிய வசதிகளை இலவசமாகத் தருவதே நல்லது.

இந்த வகையில், விண்டோஸ் 8.1 வருகையில், விண்டோஸ் 8 பயனாளர்கள் அதனை ஒதுக்க மாட்டார்கள். நிச்சயம் ஏற்றுக் கொண்டு செயல்படுவார்கள்.

ஸ்டார்ட் பட்டன், சிறிய லைவ் டைல்ஸ், அளவினை மாற்றி அமைக்கக் கூடிய டைல்ஸ், மற்றும் ஒருங்கிணைந்த தேடுதல் வசதி. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கேட்ட ஸ்டார்ட் பட்டன், திரையின் இடது புறம் கீழாக உள்ளது.

இதனைக் கிளிக் செய்தால், ஸ்டார்ட் ஸ்கிரீன் தரப்பட்டு, அதில் சில சொற்களை அமைத்துத் தேடி, நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பெறலாம்
ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ், டாஸ்க் மேனேஜர், தேடல் கட்டம் மற்றும் பயனுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்கள் தரப்படுகின்றன.

இந்த பாப் அப் மெனுவின் கீழாக, சிஸ்டத்தை ஷட் டவுண் செய்திட, ரீஸ்டார்ட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. (விண்டோஸ் 8ல், திரையின் மேல் வலது மூலைக்குச் சென்று, கீழாக இழுத்து, செட்டிங்ஸ் கிளிக் செய்து, பின் பவர் என்பதில் கிளிக் செய்து, அதன் பின் ஷட் டவுண் அல்லது ரீஸ்டார்ட் தேர்ந்தெடுக்க வேண்டியதிருந்தது)

டைல்ஸ்களை குரூப்பாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது பயனாளர்கள், இப்போது நேரடியாக, டெஸ்க்டாப் நிலைக்கு லாக் இன் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8ல் ஸ்டார்ட் மெனு சென்று தான் இதனைப் பெற முடியும்.

லாக் ஸ்கிரீனிலேயே அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவுடன் இணைந்த கிளவ்ட் ஸ்டோரேஜ் ஒருவழியாக விண்டோஸ் ஸ்டோருக்கான அப்டேட் இதில் கிடைக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X