விண்டோஸில் எளிதாக ஒரு பைலை விட்டு தாவ...!

Written By:

இன்று நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸில் நீங்கள் அடிக்கடி பைல்களை ஒரு போல்டரிலிருந்து அடுத்த போல்டருக்கு மாற்றுபவரா? நிச்சயம் நாம் அனைவருமே அதனை செய்வோம். அல்லது ஒரு புரோகிராமிலிருந்து இன்னொரு புரோகிராமிற்கு பைலை மாற்றுவோம்.

அதே போல பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து, அடிக்கடி புரோகிராம் மாறி பணியாற்றுவோம். எடுத்துக் காட்டாக, வேர்டில் ஒரு பைலையும், பேஜ் மேக்கரில் ஒரு பைலையும், எக்ஸ்புளோரர் விண்டோவினையும் வைத்துக் கொண்டு பணியாற்று வோம்.

இவற்றில் அடுத்தடுத்துச் செல்ல ஆல்ட் + டேப் உபயோகித்து போல்டருக் கு போல்டர் தாவி பைல் களைக் காப்பி செய்திடுவோம் அல்லது மாற்றுவோம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. உங்கள் விண்டோவினை அதற்கேற்ற வகையில் முதலில் சரி செய்து நிறுத்த வேண்டும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

விண்டோஸில் எளிதாக ஒரு பைலை விட்டு தாவ...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

எந்த விண்டோக்களில் நீங்கள் செயலாற்ற வேண்டுமோ அவை தவிர மற்றவற்றை மினிமைஸ் செய்திடவும். டூல் பாரில் உள்ள காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் "Tile Windows Vertically" அல்லது "Tile Windows Horizontally" என்று எதனையாவது ஒன்றைத் தேர்ந் தெடுகக்வும். அவ்வளவுதான்.

இனி நீங்கள் செயலாற்ற தேர்ந்தெடுத்த விண்டோக்கள் இரண்டும் அருகருகே ஓடு அடுக்கிய மாதிரி நிற்கும். அல்லது படுக்கை வசத்தில் இருக்கும். இரண்டில் உள்ள பைல்களை அப்படியே இழுத்து விடுவதன் மூலம் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது அடுத்தடுத்து மாறி, மாறிக் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்தலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot