விண்டோஸ் 8 க்கு அதிகரிக்கும் அப்ளிகேஷன்கள்...!

Written By:

இன்றைக்கு விண்டோஸ் 8 ஆனது தனது யூஸர்ஸூன் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி வருகிறது எனலாம்.

மேலும், நாம் பயன்படுத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த, விண்டோஸ் ஸ்டோரில், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குவிந்துள்ளன.

சென்ற மாதத்தில் இவற்றின் எண்ணிக்கை 1,66,379 ஆக இருந்தது. ஒரே வாரத்தில், இதில் 2,059 அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைக்கப்பட்டன.

இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவையாக நெட்ப்ளிக்ஸ் மற்றும் கூகுள் சர்ச் புரோகிராம்கள் உள்ளன.

விண்டோஸ் 8 க்கு அதிகரிக்கும் அப்ளிகேஷன்கள்...!

மைக்ரோசாப்ட் தந்துள்ள மேப் அப்ளிகேஷன் புரோகிராமில், முக்கியமான அப்டேட் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தற்போது Bing Smart Search செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சங்களாக, Bing Travel and Bing Weather ஆகியவை தரப்பட்டுள்ளன.

யாஹூ நிறுவனம், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான யாஹூ மெயில் அப்ளிகேஷனை அப்டேட் செய்து நவீன வசதிகளைத் தந்துள்ளது.

புதிய விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், முற்றிலும் புதிய பெயிண்ட் அப்ளிகேஷன் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் தந்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot