கண்ணாடி இல்லாத 3டி டிஸ்ப்ளேவுடன் புதிய டேப்லெட்!

Posted By: Karthikeyan
கண்ணாடி இல்லாத 3டி டிஸ்ப்ளேவுடன் புதிய டேப்லெட்!

விக்கிபேட் டேப்லெட்உலகிலேயே முதல் க்ளாஸ் ப்ரீ 3டி டிஸ்ப்ளே கொண்ட சாதனமாக இருக்கும். குறிப்பாக வீடியோ கேம் பிரியர்களுக்கு இந்த 3டி டிஸ்ப்ளே இன்னும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

இந்த விக்கிபேடின் 8 இன்ச் திரை ஒரு விளையாட்டு மைதானம் போன்ற அனுபவத்தை கொடுக்கும். இதன் பிக்சல் ரிசலூசன் 1920 X 1080 ஆகும். ஆனால் இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளம் கொண்டிருப்பதால் புதிய தலைமுறை விளையாட்டுகளையும் இந்த டிவைசில் தடையில்லாமல் விளையாடலாம்.

விக்கிபேட் 8ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டிருக்கிறது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டிருப்பதால் இதன் மூலம் மெமரியை 64 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

மேலும் இந்த விக்கிபேடின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது பிரமிப்பூட்டுவதாக இருக்கும். அதாவது வீடியோ கேமிற்காகவே இது டி-பேட் வசதியை வழங்குகிறது. அதுபோல் 2 அனலாக் குச்சிகளையும் இது வழங்குகிறது.

வீடியோ கேமை சிறப்பாக விளையாட 4 பட்டன்களை இந்த டிவைஸ் கொண்டிருக்கிறது. இதில் உள்ள எசிடிஎம்ஐ அவுட் மூலம் இந்த டிவைஸை டிவியில் அல்லது கணினி திரையில் இணைத்து பெரிய திரையில் வீடியோ கேமை விளையாடலாம்.

மேலும் இந்த விக்கிபேட் கடின விளையாட்டுகளான க்வேக் லைவ் அல்லது போஸ்போர் பேட்டா போன்றவற்றை விளையாடக்கூடிய அளவிற்கு க்ராபிக்ஸ்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே இந்த டிவைசில் ஜிடிஏ III உள்ளது. இந்த டிவைஸ் சோனி ப்ளே ஸ்டேசனுக்கும் போட்டியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த விக்கிபேடின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இது வருவதற்கு முன்பாகவே மக்கள் மனதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot