3ஜி வசதியுடன் அடுத்து ஒரு டேப்லெட்: விக்கெட்லீக் அறிமுகம்

வீக்கெட்லீக் நிறுவனம் மீண்டும் ஒரு புதிய ஆண்ட்ராய்ட் டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு வாமி ஈத்தோஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது.
இந்த டேப்லெட்டின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது வாய்ஸ் காலிங் மற்றும் 3ஜி சப்போர்ட்டுடன் வருகிறது. வரும் ஜூலை 25ல் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மேலும் இது ரூ.8,999க்கு விற்கப்பட இருக்கிறது.
இந்த டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 512எம்பி ரேம் மர்றும் 4ஜிபி சேமிப்பு ஆகிய வசதிகளுடன் வருகிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் புளூடூத், வைபை மற்றும் 3ஜி ஆகிய வசதிகளுடன் வருகிறது.
அதோடு இந்த ஈத்தோஸ் டேப்லெட் பல அப்ளிகேசன்களுடன் வருகின்றன. குறிப்பாக பேஸ்புக், ஸ்கைப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவற்றுடன் வருவதால் இந்த டேப்லெட்டின் மூலம் பேஸ்புக்கை இயக்க முடியும். மேலும் இந்த டேப்லெட் எச்டிஎம்ஐ சப்போர்ட்டையும் வழங்குகிறது.
ஏற்கனவே விக்கெட்லீக் வாமி 7 மற்றும் வாமி ப்ளஸ் என்ற இரண்டு ஆண்ட்ராய்டு ஐசிஎஸ் டேப்லெட்டுகளைக் களமிறக்கி அவற்றில் வெற்றியும் கண்டது. ஆகவே இந்த புதிய டேப்லெட்டும் விக்கெட்லீக்கிற்கு கணிசமான வெற்றியைக் கொடுக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications