விக்டு லீக் மற்றும் சாம்சங் பேப்லட்கள்: ஓர் சிறிய ஒப்பீடு

வேமி நோட் ஃபேப்லட் 5 இஞ்ச் அகன்ற தொடுதிரை வசதியினையும், கேலக்ஸி நோட் ஃபேப்லட் 5.3 இஞ்ச் சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதியினையும் எளிதாக பயன்படுத்தலாம். சாம்சங் கேலக்ஸி நோட் ஃபோப்லட்டில் 800 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், வேமி நோட் ஃபேப்லட்டில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை
பெறலாம்.
விக்டுலீக் வேமி ஃபேப்லட் ஆன்ட்ராய்டு 4.0.1 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொடுக்கும். ஆனால் இந்த ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் பற்றி எந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. அதே போன்று சாம்சங் கேலக்ஸி நோட் ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பெறலாம். இந்த ஃபேப்லட்டிலும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
வேமி ஃபேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் வசதியனை எளிதாக பெறலாம். கேலக்ஸி நோட் ஃபேப்லட், வேமி ஃபேப்லட்டையும் விட கொஞ்சம் அதி வேகத்துடன் இயங்கும் பிராசஸர் வசதியினை கொண்டதாக இருக்கும். சாம்சங் வேமி ஃபேப்லட் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரினை கொடுக்கும்.
இந்த இரண்டு ஃபேப்லட்டிலும் சிறந்த புகைப்படத்தினையும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும் 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. வேமி நோட் ஃபேப்லட்டில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும், கேலக்ஸி நோட் ஃபேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த 2 ஃபேப்லட்டில் டியூவல் கேமரா வசதியினை எளிதாக பெற முடியும்.
4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும், 512 எம்பி ரேம் வசதியினையும் பெறலாம். கேலக்ஸி நோட் ஃபேப்லட்டில் மெமரி வசதியினை பொருத்த வரையில், 2 விதமான மாடல்களை பெறலாம். 16 ஜிபி கொண்ட மாடலையும், 32 ஜிபி கொண்ட மாடலையும் இந்த கேலக்ஸி நோட் ஃபேப்லட்டில் கிடைக்கும்.
இந்த ஃபேப்லட்களின் விலை முக்கிய பங்கு வகிக்கிறது. வேமி நோட் ஃபேப்லட் ரூ. 11,000 விலையினையும், கேலக்ஸி நோட் ஃபேப்லட் ரூ. 32,700 விலையினையும் கொண்டதாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி நோட் ஃபேப்லட்டிற்கு வாடிக்கையாளர்கள் அதிக தொகை வழங்க வேண்டியதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications