Home
Computer

வேமி டிசையர் மற்றும் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்கள் ஒப்பீடு!

By Super

வேமி டிசையர் மற்றும் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்கள் ஒப்பீடு!
நவீன வசதிகளை வழங்கி வரும் டேப்லட்களின் விற்பனை அதிகம் சூடுபிடித்து வருகிறது. இதனால் நாமும் கொஞ்சம் டேப்லட்கள் பற்றிய அப்டேஷனை தெரிந்து கொள்வோம். இங்கே சமீபத்தில் அறிமுகமான விக்டுவீக் மற்றும் கார்பன் நிறுவனத்தின் டேப்லட்கள் பற்றி ஓர் ஒப்பீட்டு அலசலை பார்க்கலாம். விக்டுலீக் வேமி டிசையர் மற்றும் கார்பன் ஸ்மார்ட் டேப்-2 ஆகிய இந்த 2 டேப்லட்களில், எந்த டேப்லட் சிறந்த தொழில் நுட்பத்தினை கொண்டிருக்கின்றன என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

டேப்லட் என்கிற போது அதன் திரை பற்றிய எதிர்பார்ப்பு மிக அதிகமானதாக இருக்கும். வேமி டிசையர் மற்றும் ஸ்மார்ட் டேப்-2 ஆகிய இந்த இரண்டு டேப்லட்களும் 7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் மூலம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

வேமி டிசையர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரையும், ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எக்ஸ்பர்ஸ்டு பிராசஸரையும் வழங்கும்.

ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் நிறைய நவீன வசதிகளை ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டில் பெறலாம். இதில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் வெர்ஷன் அப்டேஷனையும் வழங்கும் வேமி டிசையர் டேப்லட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்டது.

ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் வேமி டிசையர் டேப்லட் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டாதாக இருக்கும். இந்த இரண்டு டேப்லட்களிலும் மெயின் கேமரா கொடுக்கப்படவில்லை. வேமி டிசையர் டேப்லட்டின் கேமரா, ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டை விடவும் சற்று குறைவாக இருப்பதாக தெரிகிறது.

வேமி டிசையர் டேப்லட் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை அளிக்கும். ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும். ஆனால் இந்த இரண்டு டேப்லட்களின் இன்டர்னல் மெமரி வேறுபட்டாலும், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள இந்த டேப்லட்களின் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

இந்த 2 டேப்லட்களிலும் வைபை மற்றும் 3ஜி நெட்வொர்கிற்கு சப்போர்ட் செய்யும் தொழில் நுட்பங்கள் வழங்கப்படுகிறது. வேமி டிசையர் டேப்லட்டினை விடவும், ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டின் பேட்டரியின் ஆற்றல் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. வேமி டிசையர் டேப்லட்டில் 3,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும், ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டில் 3,700 எம்ஏஎச் லித்தயிம் அயான் பேட்டரியினையும் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X