படுக்கையில் லேப்டாப், ஆபத்தை விளைவிக்கும்.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது ஏதேனும் கருவிகள் இல்லாமல் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 24 மணி நேரமும் மாற்றி மாற்றி, ஏதேனும் கருவியை கையில் வைத்துப் பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்தத் தொகுப்பு உங்களுக்குத் தான்.

அதிகரித்து வரும் வேலைச் சுமையினால் பலரும், தங்களது அலுவல்களை வீடு மற்றும் படுக்கையறை வரை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் படுக்கையில் லேப்டாப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அவற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்த தகவல்கள் ஸ்லைடர்களில்..

லித்தியம் அயன் பேட்டரி

லித்தியம் அயன் பேட்டரி

பொதுவாக நம் லேப்டாப் கருவிகளில் சக்தியூட்ட பயன்படுத்தப்படும் பேட்டரிகள் லித்தியம் அயன் கொண்டு உருவாக்கப்படுகின்றது.

பலன்

பலன்

லித்தியன் அயன் மூலம் உருவாக்கப்படும் பேட்டரிகள் சிறிய அளவு, நீண்ட பேட்டரி பேக்கப், அதிகளவு ரீசார்ஜ் போன்று பல்வேறு பயன்களை வழங்குகின்றன. ஆனால் இதில் ஒரு குறைபாடும் இருக்கின்றது.

ஆபத்து

ஆபத்து

லித்தியம் அயன் பேட்டரிகள் வெடுக்கும் தன்மை கொண்டவை ஆகும். இதன் காரணமாகவே பல்வேறு ஸ்மார்ட்போன்களும் அடிக்கடி வெடித்துச் சிதறுகின்றன.

ஹோவர்போர்டு

ஹோவர்போர்டு

லித்தியம் அயன் பேட்டரிகள் வெடிக்கும் தன்மை கொண்டவை என்பதை மீண்டும் உறுதி செய்யும் படி சமீபத்தில் லித்தியம் அயன் மூலம் இயங்கிய ஹோவர் போர்டு ஒன்றும் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

வீடு

வீடு

இது போன்று கருவிகள் ஏற்படும் தீ சில சமயம் வீடு முழுக்க பரவவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் பேட்டரிகள் சிறியதாக இருப்பதால் அவற்றை சாதாரணமாக நினைக்கக் கூடாது.

காரணம்

காரணம்

சிறிய அளவு லித்தியம் அயன் பேட்டரிகள் சிறிய கோளாறு, அதிக சார்ஜ் அல்லது தவறான கருவிகளில் பயன்படுத்தும் போது வெடித்துச் சிதறலாம்.

காற்று

காற்று

லித்தியம் நேரடியாகக் காற்றுடன் கலக்கும் போது அவை வெடித்துச் சிதறுகின்றது. இந்த தீயினை நீர் மூலம் அணைக்க முடியாது. ஏனெனில் லித்தியம் மூலம் ஏற்படும் தீ நீரில் இருக்கும் காற்றிலும் எரியும் தன்மை கொண்டதாகும். லித்தியம் மூலம் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த தீச்சுணக்கு அல்லது முறையான தீயணைப்பு கருவிகளைத் தான் பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பல்வேறு கருவிகளும் லித்தியம் அயன் பேட்டரிகள் வெடிக்காமல் இருக்கப் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இவை பேட்டரிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமலும் பாதுகாக்கும் தன்மை கொண்டவையாகும்.

ஆஃப்

ஆஃப்

லித்தியம் அயன் பேட்டரி கொண்ட சில கருவிகள் சூடாகும் போது தானாக ஆஃப் ஆகும் படி வடிவமைக்கப்படுகின்றன. சில கருவிகளில் அதிகளவு சார்ஜ் செய்யும் போது, கருவியின் சார்ஜ் முழுமையான பின் கருவிக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றன.

கவனம்

கவனம்

கருவிகளில் எத்தனைப் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை பயன்படுத்தும் போது நாம் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும். கருவிகளைத் தேவையான அளவு பயன்படுத்துவதோடு அவற்றை சரியாக பராமரிப்பதும் அவசியம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Why Charging Laptop On Your Bed Is A Bad Idea Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X