விண்டோஸ்10-ன் ஃபோகஸ் வசதி பற்றி தெரியுமா?

ஃபோகஸ் அசிஸ்ட் வசதியை இயக்கும் போது, நோட்டிபிகேசன் எனப்படும் அறிவிக்கைகள் திரையில் தோன்றாதவாறு மறைக்கப்படும்.

|

கணிணியில் திரைப்படம் பார்க்கும் போதோ அல்லது கேம் விளையாடும் போதோ மெசேஜ் பாப்அப் திரை அடிக்கடி தோன்றி எரிச்சலூட்டும் அனுபவத்தை பெரும்பாலானோர் பெற்றிருப்போம். எப்படியோ அதிலிருந்து விடுபட விண்டோஸ்10 ன் நோட்டிபிகேசன்களை மறைக்கும் புதிய அம்சமான ஃபோகஸ் அசிஸ்ட் உதவுகிறது. அமைதி நேரம்(quiet hours) என்னும் முதல் டோன்ட் டிஸ்டர்ப் வசதி குறிப்பிட்ட கால அளவில் செயல்படுவதாக இருந்தது. ஆனால் இந்த ஃபோகஸ் அசிஸ்ட் வசதியை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றலாம்.

விண்டோஸ்10-ன் ஃபோகஸ் வசதி பற்றி தெரியுமா?


ஏப்ரஸ் 2018ல் வெளியான விண்டோஸ் அப்டேட்டில் ஃபோகஸ் அசிஸ்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவைட் ஹவர்ஸ் வசதியை விட மேம்பட்ட மற்றும் எளிதில் கட்டமைக்கக்கூடிய ஒன்றாகும்.

விண்டோஸ்10-ன் ஃபோகஸ் வசதி பற்றி தெரியுமா?


1) ஃபோகஸ் அசிஸ்ட் வசதியை செயல்படுத்தல்

ஃபோகஸ் அசிஸ்ட் வசதியை இயக்கும் போது, நோட்டிபிகேசன் எனப்படும் அறிவிக்கைகள் திரையில் தோன்றாதவாறு மறைக்கப்படும்.

ஃபோகஸ் அசிஸ்ட் வசதியை இயக்க, நோட்பிகேசன் சென்டர் ஐகானை வலது கிளிக் செய்து, கீழே ஸ்க்ரோல் செய்து ஃபோகஸ் அசிஸ்ட் சென்று, அதில் "Priority only" அல்லது "Alarms only" ல் ஏதேனும் ஒன்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

முக்கியத்துவம் வாய்ந்த அறிவிக்கைகள் மற்றும் முக்கியத்துவம் அற்றவை எவை என அமைப்புகளில் சென்று தேர்ந்தெடுக்கலாம்.

ஃபோகஸ் அசிஸ்ட்-ஐ இயக்க மற்றொரு வழி, ஆக்சன் சென்டரில் சென்று எளிதாக ஆன் அல்லது ஆப்-ஐ தேர்வு செய்யலாம். ஆக்சன் சென்டருக்கு செல்ல, நோட்பிகேசன் சென்டர் ஐகானை கிளிக் செய்யலாம் அல்லது விண்டோஸ்+ஏ வை அழுத்தலாம். அதில் ஃபோகஸ் அசிஸ்ட் இல்லையென்றால், அங்குள்ள இணைப்பை விரிவாக்கி கண்டறிய முயலவும்.

ஃபோகஸ் அசிஸ்ட்-ஐ இயக்க மற்றொரு வழி என்னவென்றால், அமைப்புகள் (Settings) சென்று அதில் ஃபோகஸ் அசிஸ்ட் வசதியை ஆன் அல்லது ஆப் செய்யலாம்.

ஃபோகஸ் அசிஸ்ட்-ல் உள்ள மூன்று விதமான தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை பயனர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

1) “Off”

2) ”Priority Only”

3) “Alarms Only”

இவை முற்றிலும் பயனர்களின் விருப்பத்திற்கு உட்பட்டதே.

விண்டோஸ்10-ன் ஃபோகஸ் வசதி பற்றி தெரியுமா?

2)முன்னுரிமை பட்டியலை கட்டமைத்தல்

முன்னுரிமை பட்டியலின் மூலம் அதி முக்கியத்துவம் வாய்ந்த செயலி மற்றும் நபர்களை தேர்வு செய்யலாம்.

அமைப்புகளில் ஃபோகஸ் அசிஸ்ட்-ஐ தேர்வு செய்து, அதில் “Customizing Your Priority List” எனும் இணைப்பில் முன்னுரிமை பெற வேண்டிய செயலி மற்றும் நபர்களை தேர்வு செய்யலாம்.

இதில் விண்டோஸின் 'my people' என்னும் வசதியும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வசதியை ஏற்றுக்கொள்ளும் செயலிகளின் வாயிலாக குறுஞ்செய்திகள் அனுப்பும் நபர்களின் நோட்பிகேசன்கள் வெளிப்படும். மற்ற செயலிகள் மூலம் வரும் நோட்பிகேசன்கள் மறைக்கப்படும்.


இதில் உள்ள முக்கிய நன்மை என்னவென்றால், எப்போது இந்த வசதி வேண்டும் என்று உங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தை குறிக்கலாம். அந்த நேரத்தில் அனைத்து நோட்பிகேசன்களும் மறைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
What is Focus Assist on Windows 10 and how to use it ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X