வாட்டர் புரூப் வசதியுடன் புதிய டேப்லெட்!

நீர் தடுப்பு வசதி கொண்ட டேப்லெட்டுகள் ஜப்பானில் பிரபலமாக உள்ளன. ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் இந்த டிவைஸ்கள் மிகவும் அரிதாக உள்ளன. இந்த குறையை மற்ற மார்க்கெட்டுகளிலும் போக்கும் விதமாக பான்டெக் நிறுவனம் புதிய வாட்டர் புரூப் வசதிகொண்ட டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது.
இந்த டேப்லெட் தண்ணீர் மற்றும் ஈரப்பதம் போன்றவற்றில் இருந்து தடுப்பு வசதி கொண்டு வருகிறது.
இந்த பான்டெக் எலமென்ட் டேப்லெட்டின் சிறப்புகளைப் பார்க்கும் போது அது 1.5 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்டு டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இதன் இயங்குதளம் ஆன்ட்ராய்டு 3.2 ஹன்கோம்ப் ஆகும்.
அதுபோல் இது 16ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 8 இன்ச் ஆகும். இந்த டிஸ்ப்ளே தொடு வசதி கொண்டு நீர் தடுப்பு வசதியையும் கொண்டிருக்கிறது. இறுதியாக இதன் முக்கிய கேமரா 5 மெகா பிக்சல் ரிசலூசன் கொண்டதாகும். அதுபோல் 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவும் இந்த லேப்டாப்பில் உண்டு.
இந்த பான்டெக் எலமென்ட் டேப்லெட் மிகவும் அடக்கமான அதே நேரத்தில் குறைந்த எடையுடன் வருகிறது. மழையில் நனைந்தாலும் இந்த டேப்லெட் பாதிப்பு அடையாது. ஏனெனில் இது நீர் தடுப்பு வசதி கொண்டு வருகிறது.
இதன் டூவல்கோர் ப்ராசஸர் இந்த டேப்லெட்டுக்கு தாறுமாறான வேகத்தைக் கொடுக்கும். இதன் முக்கிய கேமரா 1080பி ரிசலூசன் கொண்ட வீடியோவை ரிக்கார்ட் செய்யும். அதுபோல் இதன் இரண்டாவது கேமரா 720பி ரிசலூசன் கொண்ட வீடியோ காலிங்கை செய்ய உதவும். இந்த டேப்லெட் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications