கிராபிக்ஸில் கலக்கும் புதிய வாக்கம் டேப்லெட்!

By Karthikeyan
|
கிராபிக்ஸில் கலக்கும் புதிய வாக்கம் டேப்லெட்!

சமீபத்தில் வாகம் நிறுவனம் ஒரு புதிய டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டுக்கு இன்டுவஸ்5 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த இன்டுவஸ்5 டேப்லெட்டை ஒரு க்ராபிக்ஸ் டேப்லெட் என்று கூறலாம். அந்த அளவிற்கு க்ராபிக்ஸ், போட்டோ மற்றும் மீடியா போன்ற துறைகளில் ஈடுபடுவோருக்கு பெரிதும் பயன்படும் வகையில் இந்த டேப்லெட் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்டுவஸ்5 ஒரு மெல்லிய டேப்லெட் ஆகும். அது அம்பிட்எக்ஸ்டரஸ் டிசைனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட்டில் எக்ஸ்ப்ரஸ் வியூவ் டிஸ்ப்ளே, டிஜிட்டல் பென் தொழில் நுட்பம், கஸ்டமைஸபுள் எக்ஸ்ப்ரஸ் கீகள் மற்றும் வயர்லஸ் இணைப்பு போன்ற தொழில் நுட்பங்களைப் பார்க்கலாம்.

இந்த டேப்லெட் கருப்பு நிறத்தில் அட்டகாசமாக படு ஸ்டைலாக வருகிறது. மிகவும் குறைந்த எடையுடன் வருவதால் இதை எடுத்துச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும்.

இந்த புதிய டேப்லெட்டில் உள்ள டிஜிட்டல் பென் தொழில் நுட்பம் மூலம் மிக விரைவாக தகவல்களை இதில் இன்புட் செய்ய முடியும். இந்த பென் மூலமாக படங்கள் மற்றும் க்ராபிக்சுகளை மிக அருமையாக வரைய முடியும். இந்த டேப்லெட் விண்டோஸ் மற்றும் மேக் இயங்கு தளங்களில் இயங்கும் சக்தி கொண்டது.

இந்த இன்டுவஸ்5 டேப்லெட் 5 மாடல்களில் வருகிறது. அதாவது இன்டுவஸ் டச் ஸ்மால் ரூ.17200க்கும், நடுத்தர டேப்லெட் ரூ.25100க்கும், பெரிய டேப்லெட் ரூ.32500க்கும் கிடைக்கும். பென் வசதி மட்டும் கொண்ட சிறிய டேப்லெட் ரூ.15200க்கும் மற்றும் நடுத்தர டேப்லெட் ரூ.21500க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X