Home
Computer

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய வோடபோன் டேப்லெட்!

By Karthikeyan
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய வோடபோன் டேப்லெட்!

புதிய வோடோபோன் ஸ்மார்ட் டேப்லெட் புதிய ஹார்ட்வேர் மற்றும் புதிய சாப்ட்வேர்கள் கொண்டு மிக ஸ்டைலாக இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்டது.

இந்த ஸ்மார்ட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 7 இன்ச் அளவில் மல்டி டச் வசதி கொண்ட எப்டி கெப்பாசிட்டிவ் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 16 நிறங்களைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 800 x 1280 ஆகும்.

கேமரா வசதியைப் பொருத்தமட்டில் இந்த கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் 2592 х 1944 பிக்சல் கொண்ட 5 எம்பி பின்பக்க கேமராவையும் அதே நேரத்தில் 2 எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த கேமரா 720பி வீடியோவையும் பதிவு செய்யும் திறன் கொண்டது.

இதன் மொத்த சேமிப்பு வசதி 16 ஜிபி ஆகும். இதை மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். தகவல்களைக் கையாள ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் எச்எஸ்டிபிஎ மற்றும் எச்எஸ்யுபிஎ ப்ரீக்வன்சிகளும் இந்த டேப்லெட்டில் உண்டு. அதோடு ப்ளூடூத் வி2.1, யுஎஸ்பி வி2.0 மற்றும் ஜிபிஎஸ் வசதி போன்ற நிறைய வசதிகளை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.

இந்த வோடோபோன் டேப்லெட்டில் 2ஜி நெட்வொர்க்கான ஜிஎஸ்எம் பேண்டுகள் மற்றும் 3ஜ நெட்வொர்க்கான எச்எஸ்டிபிஎ போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் மல்டி பார்மட் கொண்ட ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்கள் மற்றும் விதவிதமான வீடியோ விளையாட்டுகள் பேன்ற பல வசதிகளை இந்த டேப்லெட்டில் பார்க்கலாம்.

மின் திறனிற்காக இந்த டேப்லெட் லையன் 3400 எம்எஎச் பேட்டரியை வழங்குகிறது. இந்த பேட்டரி 7 மணி நேர இயங்கு நேரத்தை அளிக்கிறது. இந்த வோடோபோன் டேப்லெட்டின் மொத்த பரப்பு 194 x 120 x 11.4 மிமீ ஆகும். இதன் எடை 319 கிராம் மட்டுமே. மேலும் இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு வி3.2 ஆகும். இதன் சிபியு க்வல்காம் சினாப்ட்ராகன் டூவல் கோர் 1.2 ஜிஎச்ஸட் ஸ்கார்பியோனைக் கொண்டிருக்கிறது.

இந்த வோடோபோன் டேப்லெட்டில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது சக்தி வாய்ந்த ஆர்கனைசர், வீடியோ எடிட்டர் மற்றும் டாகுமென்ட் வியூவர் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் கூகுள் சேர்ச், ஜிமெயில், யுட்யூப், காலண்டர் மற்றும் கூகுள் டாக் போன்ற நெட்வொர்க் வசதிகளையும் இந்த டேப்லெட்டில் பார்க்க முடியும்.

இந்த புதிய வோடபோன் டேப்லெட் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X