ஸ்மார்ட்டாக இருக்கும் புதிய வோடபோன் ஸ்மார்ட் டேப்லெட்!

By Karthikeyan
|
ஸ்மார்ட்டாக இருக்கும் புதிய வோடபோன் ஸ்மார்ட் டேப்லெட்!

கடந்த வருடம் வோடோபோன் அறிமுகப்படுத்திய டேப்லெட்டிற்கு இப்போது ஸ்மார்ட் டேப்10 என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த டேப்லெட் ஹூவெய் அல்லது சிடிஇ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட் டேப் சூப்பரான ஸ்டைலில் வருகிறது. இதன் முக்கிய சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இதன் டிஸ்ப்ளே கப்பாசிட்டிவ் தொடுதிரை வசதி கொண்டது.

மேலும் இந்த டிஸ்ப்ளே 16 நிறங்களை உள்ளடிக்கியிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 10.0 இன்ச் அளவில் 800 x 1280 பிக்சல்களைக் கொண்டுள்ளது. இந்த கேமரா வசதியைப் பார்க்கும் போது பின்புறம் 5 மெகா பிக்சல் கேமராவையும் அதே நேரத்தில் 2 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது.

இதன் மொத்த மெமரி 16 ஜிபி ஆகும். இந்த மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். தகல்களை எளிதாக பரிமாறிக்கொள்ள ஏதுவாக ப்ளூடூத் வி2.1, யுஎஸ்பி 2.0 ஆர்ஜே 45, வைஃபை, ஹெட்போன் அவுட் மைக்ரோபோன் இன், ஜிகாபிட் லேன் போன்ற எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் இதில் எச்டிஎம்ஐ போர்ட் இல்லை.

இந்த ஸ்மார்ட் டேப்லெட் மின்திறனிற்காக லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த டேப்லெட்டின் தடிமன் 11.4 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 391 கிராம் மட்டுமே. அதுபோல் இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு வி3.2 ஆகும். அதுபோல் இதன் சிபியு டூவல் கோர் 1.2 ஜிஎச்ஸட் ஸ்கார்பியோன் கொண்டுள்ளது. இறுதியாக இந்த டேப்லெட் கருப்பு நிறத்தில் மிக அட்டகாசமாக இருக்கிறது.

இந்த வோடோபோன் டேப்லெட் க்வல்காம் டூவல் கோர் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகம் மிக அபாரமாக இருக்கும். மேலும் நிறைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைக்கும் வகையில் இந்த டேப்லெட்டில் அதிக இடவசதியும் உள்ளது. அதுபோல் போதுமான மல்டிமீடியா அப்ளிகேசன்களும் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் பிப்ரவரி மாதத்திற்குள் வந்துவிடும் என்று தெரிகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X