Home
Computer

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் விசியோவின் 8 இன்ச் டேப்லட்

By Super
குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் விசியோவின் 8 இன்ச் டேப்லட்
எலக்ட்ரானிக் தயாரிப்பகளைப் பொறுத்த மட்டில் விசியோ நிறுவனம் தனக்கென்று ஒரு நற்பெயரை வைத்திருக்கிறது. எப்போதுமே தங்களது தயாரிப்புகளை மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை விட குறைந்த விலைக்கு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். அதேபோல் அவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் மிகத் தரமாக இருக்கும்.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லட்டுகளை பொருத்த மட்டில் விசியோ மெதுவாக இருந்தாலும் இப்போது உறுதியாக அவற்றில் இருந்த ஒவ்வொரு வருடமும் 10 மடங்கு முன்னேற்றத்தை அடைய முயல்கின்றது அந்நிறுவனம்.

அதற்கு எடுத்துக்காட்டாக அவர்களின் புதிய அறிமுகமான விசியோ டேப்லட் விடிஏபி-1008 ஆகும். குறிப்பாக இந்த டேப்லட் ஆண்ட்ரய்டு 3.எக்ஸ் ஹணிகோம்பிற்கு போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த டேப்லட் ஒரு யூசர் ப்ரண்ட்லியாகும். இதன் செயல்பாடு மிக பக்காவாக இருக்கும்.

இந்த டேப்லட்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். இதன் அடோப் ப்ளாஷ் ப்ளேபேக் மூலம் யூடியூப்பை நாம் பார்க்க முடியும். இதன் டச் பட்டனகள் மிக மென்மையாக இருக்கின்றன.

இதன் எடை 1 பவுண்டைவிட சற்று அதிகமானதாகும். இதன் மெமரி சேமிப்பைப் பார்த்தால் இது 4ஜிபி வசதியைக் கொண்டுள்ளது. அதன் முகப்பு கேமரா சற்று குறைபாடாக தெரிகிறது. மேலும் இந்த விசியோ டேப்லட் 1ஜிஹர்ட்ஸ் எஆர்எம் சிபியுவுடன் 512எம்பி மெமரியைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் யுடியூப், ஜிமெயில், பேஸ்புக் மற்றும் கூகுள் மேப் மற்றும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வசதிகள் ஏராளமாக உள்ளன.

இதன் விலை ரூ.12,600 மட்டுமே. அதனால் குறிப்பாக நடுத்தர மக்களின் சிறந்த தேர்வாக இந்த விசியோவின் டேப்லட் இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X