வைரஸில் இருந்து கம்பியூட்டரை காப்பாற்ற....!

Written By:

இன்றைக்கு கம்பியூட்டரில் நாம் ஏதாவது ஒரு பைலை டவுண்லோட் செய்கையில் அதனோடு சேர்த்து வைரஸூம் வந்துவிடுகின்றது எனலாம்.

கம்பியூட்டரில் ஆன்ட்டி வைரஸ் மட்டும் நாம் போடவில்லை எனில் இன்றைக்கு நமது கம்பியூட்டர்கள் மூழுவதும் வைரஸ்களால் நிரம்பிவிடும்.

இதோ கம்பியூட்டர் வைர்ஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில் எளிய வழிகளை இங்கு காணலாம்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வைரஸில் இருந்து கம்பியூட்டரை காப்பாற்ற....!

#1

உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பிலிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப் படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம்.

உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும்.

வைரஸில் இருந்து கம்பியூட்டரை காப்பாற்ற....!

#2

இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.

வைரஸில் இருந்து கம்பியூட்டரை காப்பாற்ற....!

#3

சேப் மோடில் இருந்தபடி, வைரஸ் ஸ்கேன் செய் திட நீங்கள் விரும்பலாம். அதற்கு முன்னர், தற்காலிக பைல்களை நீக்கவும். இதனால், டிஸ்க் இடம் சற்று கூடுதலாகக் கிடைக்கும்; வைரஸ் ஸ்கேனிங் வேகமாக நடைபெறும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup utility என்பதைப் பயன்படுத்த, Start, All Programs (or just Programs), Accessories, System Tools, Disk Cleanu எனச் செல்லவும்.

வைரஸில் இருந்து கம்பியூட்டரை காப்பாற்ற....!

#4

உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து வைத்திருந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாக, வேறொரு மால்வேர் ஸ்கேனிங் அல்லது எதிர்ப்பு புரோகிராமினை இயக்கவும். இதற்காக, இணையத்திலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். லட்சக் கணக்கில் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் அவை அனைத்தையும் நீக்கும் என எண்ண வேண்டாம்.

வைரஸில் இருந்து கம்பியூட்டரை காப்பாற்ற....!

#5

நாம் எப்போது நாமாக இயக்குகிறோமோ, அப்போது இயங்கத் தொடங்கி, மால்வேர்களை அழிக்கும் புரோகிராம்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும். அதனை அடுத்து, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the virus problems in computer
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்