கடந்த ஆண்டு வின்சி... இந்த ஆண்டு வின்சி டிப்ளாக் டேப்லெட்!

Posted By: Karthikeyan
கடந்த ஆண்டு வின்சி... இந்த ஆண்டு வின்சி டிப்ளாக் டேப்லெட்!

கடந்த 2011 ஆண் ஆண்டை டேப்லெட் ஆண்டு என்று அழைக்கலாம். ஏனெனில் அந்த அளவிற்கு பல நிறுவனங்கள் தமது பல வகையான புதிய டேப்லெட்டுகளைக் களமிறக்கின. குறிப்பாக, குழுந்தைகளுக்கான டோட்லர் டெப்லெட்டுகளை அறிமுகப்படுத்தியது மூலம் ஒரு புதிய ட்ரென்டும் உருவாகியிருக்கிறது. இந்த டோட்லர் டேப்லெட்டுகள் உருவாக்கும் நிறுவனங்கள் கற்பதிலும் மற்றும் குழந்தைகளுக்கான புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்துகின்றன.

கடந்த ஆண்டில் வின்சி என்ற டேப்லெட் பலரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு டோட்லர் டேப்லெட் ஆகும். இந்த ஆண்டு நடைபெற்ற லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் இந்த டேப்லெட்டில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வின்சி டேப்லெட்டின் முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இந்த டேப்லெட் 7 இன்ச் அளவில் தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 800 x 480 ஆகும். மேலும் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட கோர்ட்டெக்ஸ் எ8 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இது 512 எம்பி ரேமையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த வின்சி ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தில் இயங்குகிறது.

இந்த புதிய டேப்லெட்டின் பெயர் வின்சி டிப்ளாக் ஆகும். இந்த வின்சி டிப்ளாக் வின்சி டேப்லெட்டை விட சற்று சிறியதாகும். ஆனால் இதன் டிசைன் வின்சியைப் போலவே ஒத்திருக்கிறது. அதுபோல் இதன் திரை, ப்ராசஸர் மற்றும் போர்ட்டுகள் ஆகியவையும் வின்சியைப் போலவே இருக்கின்றன. ஆனால் இதன் விலை வின்சியைவிட குறைவு.

மேலும் இந்த வின்சி டிப்ளாக்கில் ரப்பரால் மூடி இருக்கிறது. அதனால் இது கீழே விழுந்தாலும் இது எளிதில் உடையாது. இதில் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால் இந்த டேப்லெட்டில் உள்ள ஓரங்களை நேரடியாக இணைப்பதற்கு ஏற்ப ஒரு அமைப்பு இதில் உள்ளது. அதனால் இந்த டேப்லெட் மிக அடக்கமாக இருக்கும்.

பழைய வின்சி டேப்லெட்டின் ஒரு முக்கிய குறைபாடு என்னவென்றால் அதில் வைபை இணைப்பு கிடையாது. ஆனால் இந்த புதிய வின்சி டிப்ளாக் அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்து புதிய சோஷியல் கேமிங் அப்ளிகேசன்கள் கொண்டு வருகிறது. மேலும் இந்த புதிய டேப்லெட் சோஷியில் கேமிங்கில் அதிக அக்கறை வைத்திருக்கிறது. இந்த விளையாட்டுகளை குழந்தைகள் தங்களது வயது ஒத்த நண்பர்களோடு விளையாடும் போது அவர்களுக்கிடைய நல்ல ஒரு உறவு ஏற்படுகிறது. அதுபோல் அவர்கள் வெளி உலகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த வின்சி டிப்ளாக் டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மலிவு விலையில் வரும் என்று தெரிகிறது. மலிவு விலையில் வருவதால் விற்பனையில் சாதனை புரியும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்