Home
Computer

புதிய வியூகத்துடன் வரும் வியூவ்சோனிக் டேப்லெட்!

By Karthikeyan
புதிய வியூகத்துடன் வரும் வியூவ்சோனிக் டேப்லெட்!

இந்த மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறும் உலக கேட்ஜெட் கண்காட்சியில் வியூவ்சோனிக் தனது புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் பெயர் வியூவ்சோனிக் வியூவ்பேட் ஜி70 ஆகும்.

இந்த வியூவ்சோனிக் ஜி70 டேப்லெட்டில் பல முக்கிய அம்சங்களைப் பார்க்க முடியும். அதாவது இந்த டேப்லெட் 7 இன்ச் அளவில் ஒரு தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த திரை 1024 x 600 பிக்சல் ரிசலூசனையும் அதே நேரத்தில் 163 பிபிஐ பிக்சல் அடர்த்தியையும் கொண்டுள்ளது.

கேமரா வசதியைப் பார்த்தால் இந்த டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது இதன் 2 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா வீடியோ பதிவு செய்யும் வசதியைக் கொண்டுள்ளது. இதன் இயங்குதளம் ஆன்ட்ராய்டு 4.0 ஆகும்.

இந்த புதிய வியூவ்சோனிக் டேப்லெட்டின் மற்ற பொதுவான அம்சங்களைப் பார்த்தால் இது 4ஜிபி இன்டர்னல் மெமரியையும் மற்றும் 1ஜிபி ரேமையும் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை விரிவுபடுத்த முடியும்.

இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இந்த டேப்லெட் 3ஜி நெர்வொர்க் சப்போர்ட், வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி மைக்ரோ மற்றும் மினி யுஎஸ்பி இணைப்பு மற்றும் மினி எச்டிஎம்ஐ போன்ற எல்லா இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த வியூவ்சோனிக் டேப்லெட்டின் ப்ராசஸர் பற்றி அதிக தகவல்கள் வரவில்லை. மேலும் இதன் விலை பற்றிய தகவலும் இன்னும் கிடைக்கவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X