Home
Computer

அசுர பலத்துடன் வரும் வியூவ்சோனிக் டேப்லெட்!

By Super

அசுர பலத்துடன் வரும் வியூவ்சோனிக் டேப்லெட்!
வியூவ்சோனிக் நிறுவனம் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. வியூவ்பேட் 10எஸ் என்ற பெயரில் இந்த டேப்லெட் மார்க்கெட்டிற்கு வருகிறது.

இந்த வியூவ்பேட் டேப்லெட் என்விடியா டேக்ரா 250 எஸ்எம்பி டூவல் கோர்டெக்ஸ் -ஏ9 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இந்த ப்ராசஸரின் கடிகார வேகம் 1 ஜிஹெர்ட்ஸ் ஆகும். அதுபோல் க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இந்த டேப்லெட் என்விடியா டேக்ரா 2 அல்ட்ரா லோ பவர் ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் யூனிட்டையும் கொண்டுள்ளது.

இந்த டெப்லெட்டின் டிஸ்ப்ளே 10 இன்ச் அளவைக் கொண்டது. மேலும் இந்த டிஸ்ப்ளே எல்இடி பேக் லிட் டிஎப்டி அகல திரையைக் கொண்டது. மேலும் ,கெப்பாசிட்டிவ் மல்டி டச் வசதியை வழங்குகிறது. இதன் பிக்சல் ரிசலூசன் 1024 x 600 ஆகும். இந்த டேப்லெட் கூகுள் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரோயோ இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த வியூவ்பேட் டேப்லெட்டின் ரேம் 512 எம்பி கொண்ட டிடிஆர்2 வகையைச் சார்ந்ததாகும். 32 ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய மெமரியை இது கொண்டுள்ளது. இதன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இதன் மெமரியை விரிவுபடுத்த முடியும். மேலும் இந்த டேப்லெட் 1.3 மெகா பிக்சல் வெப் கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட்டின் ஒலி அமைப்பைப் பார்த்தால் அது 1.5 வாட்ஸ் பவர் அவுட் புட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. அதனால் இது ஹை டெபினிசன் ஆடியோவை வழங்கும். அதுபோல் இதில் இன்டக்ரேட்டட் மைக்ரோபோனும் உண்டு. அதோடு 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் இந்த டேப்லெட்டுக்கு சிறப்பு சேர்க்கிறது.

இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இது எடிஎம்ஐ இணைப்பு, யுஎஸ்பி 2.0, ப்ளூடூத் 2.1 மற்றும் வைபை ஆகிய இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. மின் திறனிற்காக இது 3300 எம்ஏஎச் மின் திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பைப் பார்த்தால் அது 275.5 மிமீ x 178.5 மிமீ x 14.5 மிமீ ஆகும். இதன் மொத்த எடையே 730 கிராம்கள் மட்டுமே.

இந்த வியூவ்பேட் டேப்லெட் கருப்பு நிறத்தில் வந்து நமது கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. இந்த டேப்லெட் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும் வகையில் மிக உறுதியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.இது கீழே விழுந்தாலும் எளிதில் உடைந்து விடாது.

இந்த டேப்லெட்டின் யூசர் இன்டர்பேஸ் டேப் யுஐ என்ற பாரைக் கொண்டுள்ளது. இந்த பார் திரையின் வலது புறம் இருக்கும். இந்த பார் எல்லா தகவல்களையும் கொண்டிருக்கும். இந்த டேப்லெட் 1080பி விடியோவை சப்போர்ட் செய்யும். அதுபோல் எல்லா விதமான மல்டி மீடியா பைல்களையும் சப்போர்ட் செய்யும்.

இந்த வியூவ்பேட் 10எஸ் டேப்லெட் ரூ.20000 விலையில் விற்பனைக்கு வர உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X